Thursday 2 October 2014


Following Services are DONE Here

1.Anti-virus and Internet Security
2.Wired and Wireless Networking-Internet
3.Data Backup and Recovery
4.Internet Connectivity Setup
5.Troubleshooting and Repair
6.Printing and other hardware issues
7.New computer setup including data transfer
8.Improve computer performance
9.Software & Hardware Upgrades

Wednesday 1 October 2014

ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...

மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட் சாப் என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம் வரைந்து பழக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி ஆசை உள்ள ஓவியர்களுக்கு இலவசமாக ஒரு சிறந்த மென்பொருள் இது.

விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?

விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில் முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா?கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும். பலர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்டணம் செலுத்தி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவதனைத் தள்ளிப்போடலாமே என்ற எண்ணமே முக்கிய காரணம்.
ஆனால் சில உண்மைகளை நாம் எடுத்துக் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி 2001ல் வெளியானது. அடுத்து 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த ஒரு டஜன் ஆண்டில், ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் புதிய சிஸ்டத்திற்கு, புதிய கணனிக்கு மாறி இருக்க வேண்டும்.
பண அடிப்படையில் பார்த்தால் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் நான்கு மாற்றங்களுக்கு முன்னால் இருந்ததனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரியும். இது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது. பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான செலவு, புதிய சிஸ்டம் மற்றும் கணனிக்கு மாறுவதைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
இணையவெளியில் உலாவும் திருடர்கள், எக்ஸ்பிக்கு தொடர்ந்து குறி வைத்துக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம், இன்னும் பலர் இதனையே பயன்படுத்தி வருவதே.
மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்சத்தில், பாதுகாப்பு எதுவும் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி மாறிவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட ஒரு சிறிய இமெயில் கூட போதும் என்ற நிலை உருவாகும்.
மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டில், எக்ஸ்பி சிஸ்டத்தின் இயக்கத்திற்கு அப்டேட் எதனையும் தராது என்பது உறுதி. எனவே பயனாளர்களுக்கு எக்ஸ்பி அவர்களின் பிடியில் இருக்காது. என்ன விளைவு ஏற்பட்டாலும் அவர்கள் மட்டுமே அதனைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பழைய கணனிகளில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்து இயக்கினாலும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கு முழுமையான செயல்பாடு கிடைக்காது.
உங்கள் நிறுவனத்தில் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்த உங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்தினால், தாமதமான வேலைப்பாட்டிற்கு நீங்களே வழி வகுத்து நிறுவனத்தின் நேரம் மற்றும் உழைப்பு இழப்பிற்கு வழி வகுக்கிறீர்கள்.
பழைய குதிரையை என்ன தட்டினாலும், அதனால் முடிந்தால்தானே ஓடும். குதிரை மீது அமர்வதற்கு புதிய சீட் வாங்கிக் கொடுத்தாலும், குதிரை பழையதாக இருந்தால், அதனால் இயன்றவரை தானே ஓடும்.
இன்னொரு வழியில் இதனைப் பார்க்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை நல்ல முறையில் பராமரித்தால் நீங்களே ஒரு மெக்கானிக்காக இருந்தால், தொடர்ந்து ஓட்ட முடியும். ஆனால், எண்ணிப் பாருங்கள்.
அதே போல் தான் விண்டோஸ் எக்ஸ்பியை இன்றைய சூழ்நிலையில் இயக்குவது. விண்டோஸ் எக்ஸ்பி உருவாகி வெளியான காலத்தில், கணனியின் இயங்கும் திறன் மற்றும் தன்மைக்கேற்ப எக்ஸ்பி உருவாக்கப் பட்டது. 640 பிக்ஸெல்கள் கொண்ட திரை அகலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6க்கென உருவானது. தற்போது அது இயங்கவே முடியாது என்று கைவிடப்பட்ட ஒரு பிரவுசராகும். ஆனால், அதனை இயக்க உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
விண்டோஸ் எக்ஸ்பி வெளியான போது, யு.எஸ்.பி.2 சப்போர்ட் செய்யப்படவில்லை. ராம் மெமரியின் அளவு மிகக் குறைவே. 137 ஜிபி அளவிலான ஹார்ட் டிஸ்க் தான், அதிக பட்ச அளவாக இருந்தது. இப்போது தொடக்க நிலையே 500 ஜி.பி. ஆக தற்போது உள்ளது.
எக்ஸ்பி பயன்படுத்தும் சிலர், தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல் இயங்காது என்று எண்ணுகின்றனர். எனவே தான் எக்ஸ்பி மட்டும் எங்களுக்குப் போதும் என்கின்றனர். இதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.
கீழே உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று கண்டறியுங்கள். சரி வராதுஎன்று பதில் வந்தால், புதிய சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில் அப்ளிகேஷன் புரோகிராமினை மாற்றுங்கள்.
சரியாக இயங்காது என்று நீங்கள் எண்ணும் புரோகிராம்கள், அண்மைக் காலத்திய இயக்க முறைகளுக்கு ஏற்றவகையில் மாற்றப் பட்டிருக்கும். நீங்கள் அப்டேட் செய்திடாமல் அதனைக் குற்றம் சொல்லிப் பலனில்லை.
புதிய பதிப்பிற்கு மாறினால் கூடுதல் வசதிகள் கிடைக்கலாம். உங்கள் அலுவலகம் மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு இதனால் அதிக லாபம் வரலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி வந்த காலத்தில் மடிக்கணனிகள் ஆடம்பரமான கம்ப்யூட்டிங் முறையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் என்பவை பற்றி யாரும் எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். ஐபேட் போன்ற சாதனங்கள் எல்லாம், விஞ்ஞானக் கற்பனைக் கதைகளில் மட்டுமே மிதந்தன.
யு ட்யூப், ஸ்கை ட்ரைவ், ஜிமெயில், மை ஸ்பேஸ் என்பவை எல்லாம் அப்போது இல்லை. பயர்பாக்ஸ், உபுண்டு லினக்ஸ், ஐபாட் என்பவை எல்லாம் கேட்காத பெயர் களாகும். ஐபோனுக்கு ஐந்தாம் நிலையில் அப்டேட் செய்திடும் போது ஐபோன் வராத காலத்தில் இருந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவையா என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உங்கள் கணினி விரைவாக செயல்பட 10 கட்டளைகள்

உங்கள் கணினி வேகமான செயல் திறனுடனும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கவேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருக்கும். புதிதாக வாங்கிய கணினியில் இத்தகைய செயல்திறன் இருக்கும். காரணம், குறைந்த அளவு கோப்புகளும், அதிக அளவு இடமும், வேண்டாத குப்பைகள் மிக மிகக் குறைந்த அளவில் இருப்பதுமே.அதுவே, ஓர் ஆண்டிற்குப் பிறகு என்றால் டெஸ்க்டாப் நிறைய ஐகான்களும், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட ரெஜிஸ்ட்ரி, அதிக அளவு கோப்புகள் என்று நிறைந்து வழியும் குப்பைத்தொட்டி போல கணினி மாறியிருக்கும். இதனால் செயல் திறன் குறைந்து, கணினியைத் தொடங்குவதற்குக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு மாறிய கணினி விரைவிலேயே செயலிழந்து போகும் வாய்ப்பும் உண்டு. கணினியின் வன்தட்டு (ஹார்ட்டிஸ்க்) செயலிழந்து போகுமானால் நம்முடைய விலை மதிக்க முடியாத கோப்புகளையும் சேர்ந்தே இழக்க நேரிடும். இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கணினி பயன்படுத்து
பவர்கள் விழிப்புடன் இருந்து கணினியைப் பாதுகாப்புடன் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
 
கணினி விரைவான செயல்திறனுடன் இயங்க 10 கட்டளைகளை ஒவ்வொரு கணினிப் பயனரும் கடைப்பிடிக்கவேண்டும்.

1.    கணினியின் டெஸ்க்டாப்பில் நாம் அதிகமாக பயன்படுத்தாத மென்
பொருள் ஷார்ட்கட் ஐகான்கள் இருந்தால் முதலில் அவற்றை நீக்க
வேண்டும். அடுத்ததாக டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்த ஃபைல்கள் மற்றும் பிற ஃபைல்கள், ஃபோல்டர்களைப் போட்டு நிரப்பி வைக்காதீர்கள்.

2.    கணினி தொடங்கும்போது தேவையில்லாத புரோக்ராம்கள் பின்புலத்தில் இயங்கலாம். அவற்றை ஸ்டார்ட் அப் (Startup) பகுதியிலிருந்து நீக்கவும் அல்லது அவற்றின் செயல்பாட்டை தடை செய்யவும்.

3.    முடிந்தவரை மாதத்திற்கு ஒரு முறையாவது ஹார்ட் டிஸ்க் டிரைவ்களை டிபிராக்மெண்ட் (Defragment) டூலைப் பயன்படுத்தி கோப்புகளை சீராக்கவும்.

4.    டெஸ்க்டாப்பை அழகூட்ட அதிக கொள்ளளவு கொண்ட படங்களையோ, மேம்பட்ட கிராபிக் அனிமேஷன் தீம்களையோ அமைக்காதீர்கள். எளிமையான வடிவமைப்பே கணினி வேகமாக இயங்க உதவும்.

5.    இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர் என்றால் தற்காலிக இணையக் கோப்புகள் (Temprovary Internet Files) மற்றும் குக்கீகளை (Cookies)  தினமும் அழித்துவிடவேண்டும்.

6.    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கான மேம்படுத்தல்களை (Updates) நிறுவிக்கொள்ளவும். இது வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்கள் ஆகிய எண்ணற்ற தீங்கிழைக்கும் நிரல்களிடமிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க உதவும்.

7.    மென்பொருள் இயக்கத்திற்கு உதவும் வகையில் உருவாகும் தற்காலிக கோப்புகளை (Temp Files) தினந்தோறும் அழித்துவிடவும்.

8.    சமீபத்தில் பயன்படுத்திய ஃபைல்களுக்கான ஷார்ட்கட்கள் ரீஸண்ட் டாக்குமெண்ட்ஸ் பகுதியில் பட்டியலிடப்படும். இவற்றையும் நீக்கவும்.

9.    புதிய மென்பொருள்கள் நிறுவும்போது ஹார்ட் டிஸ்க் மற்றும் ரிஜிஸ்ட்ரியில் அதற்கென இடம் ஒதுக்கப்படுகிறது. அதிக மென்பொருள்கள் பதியப்படுவதால் ரிஜிஸ்ட்ரி செயல்படும் வேகம் குறையும். எனவே ரிஜிஸ்ட்ரி கிளீனர் மென்பொருளை இரு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரியை சீர் செய்யவும்.

10.    இவையல்லாமல் கணினி வேகத்தைக் கூட்ட சிஸ்டம் பிராப்பர்டீஸ் பகுதியில் Advanced சென்று “Adjust for  best performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தினால், கணினியின் வேகம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம். தேவையற்ற கோப்புகளை அழிக்க சி கிளீனர் (C-Cleaner) போன்ற பல இலவச மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றைப் பதிந்து தினமும் பயன்படுத்துவது அவசியமாகும்.

விண்டோஸ் தடயங்களை அழிக்க..

ஒரு சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி? 
 
வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

விநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இன்டர்நெட்

அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 
இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர். ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும். ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் அமைப்பினை, நாசா பயன்படுத்துவதில்லை. ESnet (Energy Science Network) என்னும் ஷேடோ நெட்வொர்க் ஒன்றை இந்த மைய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கட்டமைப்பில் இந்த டேட்டா பரிமாற்றம் நடைபெறுகிறது. தற்போது இவற்றின் மூலம் விநாடிக்கு 91 கிகா பிட்ஸ் டேட்டா பரிமாறப்படுகிறது. இதுதான், உலகிலேயே அதி வேக இணைய டேட்டா பரிமாற்றமாகும்.

நாசா இந்த வேக கட்டமைப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரப்போவதில்லை. ESnet நெட்வொர்க்கினை அமெரிக்காவின் Department of Energy துறை இயக்கி வருகிறது.

அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில், பெரும் அளவில் டேட்டா பரிமாற்றம் செய்திட வேண்டியுள்ளது. இவற்றை ஹார்ட் டிஸ்க் வழியாக மாற்றிக் கொள்வதில் ஏற்படும் நேர விரயத்தைத் தடுக்க, இந்த அதிவேக நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது.

விஞ்ஞான ஆய்வுகள் நம் பூகோள அமைப்பினால் தாமதப்படக் கூடாது என்ற குறிக்கோளுடன் இந்த அதிவேக கட்டமைப்பு உருவாக்கப் பட்டதாகவும், இதன் வேகத்தினை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த துறை நிர்வாகி கிரிகோரி பெல் தெரிவித்துள்ளனர்.

பின்னொரு காலத்தில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

டூயல் பூட்டிங் சிஸ்டம்

ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது. 
எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விண்டோஸ் 7 பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம். கூடுதலாக விண்டோஸ் 7 மட்டுமின்றி விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.