Tuesday 29 September 2015

நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்!!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர் சந்திக்கும் பிரச்னை, செல்போன் தவறி நீரில் விழுந்துவிட்டால் அதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடும். அதனால் தற்போது வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெளியாக உள்ளது.

இதில் நீரில் மிதக்கும் ஐபிஎக்ஸ்7
சான்று பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம். நீரில் மிதக்கும் கோமெட் கோர் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இங்கே..

* கோமெட் கோர் ஸ்மார்ட்போன், தற்சமயம் இன்டிகோகோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

* கோமெட் கோர் ஸ்மார்ட்போன் IPx7 சான்று பெற்றிருக்கின்றது. இதனால் இந்த கருவி நீரில் மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோயன்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.

* கோமெட் ஸ்மார்ட்போன் கருவியில் 16 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

* 4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டு 4.7 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.

* ஆண்ட்ராய்டு 5.1 ,2.0Ghz ஆக்டாகோர் ப்ராசஸர், ஸ்டாக் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் க்யூ லாக் என்க்ரிப்ஷன் கருவியினை பாதுகாக்கும்.

*இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபியின் விலை 249 டாலர் மற்றும் 64ஜிபியின் விலை 289 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tuesday 15 September 2015

விண்டோஸூக்கு மாற்றாக இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம்

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக நவீன கணினி மேம்பாட்டு மையத்தால் "பாஸ்"(பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ்) Bharat Operating System Solutions என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சிஸ்டம், 3 மாதங்களாக பல்வேறு ஊடுருவலுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்களையும் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதிய கோடிங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்னோடன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க உளவுத்துறையால் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியா என குறிப்பிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..

விண்டோசைப் போன்று இல்லாமல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
SITE LINK : http://www.bosslinux.in/

BOSS5.0 is now available for download

DOWNLOAD LINK : ftp://14.139.180.38/ISO Images/Desktop/anokha/i386/boss-5.0-i386-DVD-23-Dec-2013.iso

Thursday 10 September 2015

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஐடியா நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான நல்ல இடத்தில் தான் இருக்கிறோம் என்றும், ஏனைய நிறுவனங்களோடு 4ஜி போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது..!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஐடியா நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான நல்ல இடத்தில் தான் இருக்கிறோம் என்றும், ஏனைய நிறுவனங்களோடு 4ஜி போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது..!

3ஜி சேவை மூலம் 275 மில்லியான பயனாளிகளை சென்றடையும் ஐடியா, 4ஜி சேவையை அறிமுகம் செய்து, விரிவுபடுத்தியப்பின் 750 மில்லியன் பயனாளிகள் வரை சென்றடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இலவச வை-பை : கூகுள் முடிவு..!


கூகுள் நிறுவனத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படும் கூகுள் ஃபைபர் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீட்டிக்கப்படுகின்றது. ஹைத்ராபாத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தெலுங்கானா அமைச்சர் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முழுவதும் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இயங்கும் முக்கிய ரயில் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கூகுள் நிறுவனம் இந்திய ரியல்வேயுடன் இணைந்து ப்ராஜக்ட் நீலகிரி எனும் திட்டத்தின் முதல் கட்டமாக நான்கே மாதங்களில் இந்தியாவின் சுமார் 400 ரயில் நிலையங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் இலவச இண்டர்நெட் பயன்படுத்த தங்களது மொபைல் நம்பரினை வெரிஃபை செய்து, ஒரு முறை மட்டும் கடவு சொல் என்டர் செய்து இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்கு இண்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும் பின் நேரம் அதிகரிக்க இண்டர்நெட் வேகம் குறைய ஆரம்பிக்கும் ஆனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்த இலவச இண்டர்நெட் பயன்படுத்தலாம்.