Friday 26 May 2017

இனி வாட்ஸ் ஆப்பில் தப்பான மெசேஜ் அனுப்பிட்டா பயப்பட தேவையில்லை..!
வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் மெசேஜை, படிப்பதற்கு முன்னரே அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
No automatic alt text available.
உலகின் முக்கிய சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், தன்னுடைய பயனாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பயனாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய மெசெஜை, எதிர் முனையில் உள்ள ஒருவர் பார்க்கும் முன்னரே அந்த மெசேஜை அழிக்கவோ அல்லது எடிட் செய்யவோ கூடிய புதிய வசதியை விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய வசதியின்படி, ஒரு மெசெஜ் அனுப்பப்பட்ட 5 நிமிடங்களுக்குள் மட்டுமே அதனை அழிக்க முடியும்,எடிட் செய்ய முடியும். தற்போது இந்த புதிய வசதிகள் குறித்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. எனவே கூடிய விரைவில் வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுமட்டுமல்லாமல் பயனாளர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து வாட்ஸ் ஆப்பில் குறிப்பிடும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9

நோக்கியாவின் வரவிருக்கும் முக்கியமான ஆண்ட்ராய்டு கருவிகளில் ஒன்றான நோக்கியா 9 பற்றி சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் நோக்கியா 9 கருவியில் 4ஜிபி ரேம் இடம்பெறும் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பென்ஞ்ச்மார்க் தவகவளின் கீழ்
புதிய தகவலின்கீழ் இக்கருவி 8ஜிபி ரேம் கொண்டு வரும் என்று அறியப்படுகிறது. இது நிறுவனத்தின் மிகவும் எதிர்பாராத ஒரு நடவடிக்கையாகும். இந்த முடிவு உண்மையாக இருப்பின் நோக்கியா 9 மாறுபட்ட மாறுபாடுகளில் வரும் என்றும் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் வெளியான தகவல் இக்கருவியை அன்நோன் ஹார்ட் என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். 1.90GHZ கொண்ட ஒரு Octa-core-செயலி மூலம் இயக்கப்படும் என்றும் வெளியான தகவல் காட்டுகிறது. நோக்கியா 9 கருவியில் சமீபத்திய #Snapdragon 835 செயலி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சாதனம் Android 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது.
நோக்கியா 9 சார்ந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.4,999/-ல் எந்தவொரு லேப்டாப்பையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம், எப்படி.?


உங்கள் மேக்புக்ஸ் உள்பட எந்தவொரு மடிக்கணினையும் இந்த எளிய தந்திரத்தின்வழியாக ஒரு தொடுதிரை சாதனமாக மாற்ற முடியும் என்று நாங்கள் உங்களுக்கு சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.??
இந்த தந்திரம் மிகவும் எளிது. நியோநோட் ஏர்பார் (Neonode in AirBar) என்பது ஒரு மேக்னட்டிக் லேப்டாப் அக்க்சரியாகும். இது உங்கள் மடிக்கணினியின் டிஸ்ப்ளேவின் கீழ் மற்றும் தொடுதிரை மற்றும் விரல் இயக்கங்கள் மற்றும் சைகைகள் தொடுதிரை திறன்களைப் பிரதிபலிக்கும். ஆப்பிள் மடிக்கணினிகளுக்கான ஏர்பேர் மேக்புக் ஏர் மாடலுக்கு மட்டுமே முன் வரிசையில் கிடைக்கும் இந்த சாதனத்தை விண்டோஸ் 10 லேப்டாப் பயனர்களும் அவர்களின் பிளக் மற்றும் டச் தீர்வை இதனைக்கொண்டு உடனடியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நியோநோட் ஏர்பேக் ஆனது மூன்று திரை அளவுகள் - 13.3 அங்குல, 14 அங்குல மற்றும் 15.6 அங்குல கொண்ட மடிக்கணினிகளுக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் விரல்கள் கொண்டு மட்டுமின்றி க்ளவுஸ், பெயிண்ட் ப்ரஷ், ஸ்டைலஸ் மற்றும் பலவற்றை கொண்டு தொடர்புகொள்வதற்கும் இசைவாக இயங்குகிறது.

டச் அல்லாத லேப்டாப்
அதுமட்டுமின்றி டாப், ஸ்வைப், சிஞ்ச், ஜூம் மற்றும் ரொட்டேட் போன்ற பல சைகைகளை இந்த ஏர்பார் சாதனத்தை இயல்பில் ஒரு டச் அல்லாத லேப்டாப்பில் இணைபதின் மூலம் சாத்தியமாக்கலாம்
தடை இல்லை
இதை பயன்படுத்த எந்த லேப்டாப் பிராண்ட்டிற்கும் தடை இல்லை. ஆனால் அது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று திரை அளவுகளில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் விண்டோஸ் 10 மூலம் இயங்க வேண்டும்.
விலை நிர்ணயம்
இந்த சாதனம் அமேசான் இந்தியாவில் பிளக் மற்றும் டச் அசெஸரியின் கீழ் மூன்று வகைகளாக பட்டியலிட்டபட்டுள்ளது. நியோநோட் ஏர்பார் 13.3 அங்குல மற்றும் 15.6 அங்குல சாதகமானது ரூ.4,999/- என்ற விலை நிர்ணயத்தையும், 14 அங்குல நோட்புக் வைத்திருந்தால் இதே சாதனம் ரூ.5,988/-க்கும் விலை நிர்ணயம் பெற்றுள்ளது.
திரையின் அடிப்பகுதியில்
இந்த ஏர்பார் சாதனத்தை மடிக்கணினிகளின் பிளக் மற்றும் டச் தீர்வு என்றே வெளிப்படையாக அழைக்கலாம். இந்த சாதனம் உங்கள் மடிக்கணினி திரையின் அடிப்பகுதியில் காந்தப் பட்டி மூலம் இணைக்கப்படும் மற்றும் ஒரு யூஎஸ்பி கேபிள் கொண்டு உங்கள் மடிக்கணினி போர்ட் உடன் இணைக்கப்படும்.
கண்ணுக்கு தெரியாத ஒளி வெளியீடு
ஒருமுறை செட் அப் செய்தபின்னர், சாதனத்தின் வழியே இயக்கப்படும் பட்டை இயக்கங்கள் மற்றும் சைகைகளை கண்காணிக்க கண்ணுக்கு தெரியாத ஒளி வெளியீடு மூலம் அவைகளை தொடர்புடைய அலகுகளாக மொழிபெயர்க்கும். தொடுதிரை லேப்டாப்பைப் பயன்படுத்துவது போல செய்யும்.
சேதமாகும்
இதர பிற எல்லாவற்றையும் போலவே, நியோநோட் ஏர்பார் சாதனமும் அதற்கே உரிய சொந்த சவால்களையும் கொண்டுள்ளது. டிஸ்பிளேவிற்கு கீழே சிறிய அறை இல்லாத மடிக்கணினிகளில் இது மிகவும் உபயோகமாக இல்லை. மடிக்கணினியை மூடுவதற்கு முன்பாக இந்த சாதனத்தை அகற்றுவதை நினைவில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஏர்பார் மற்றும் லேப்டாப் ஆகிய இரு சாதனங்களுமே சேதமாகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

Monday 22 May 2017

சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள்

போதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்
போதைக்கு அடிமையாவதை விட சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் , யூடியூப்,ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களிடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 14 -24 வயதுக்குள் உள்ள 1500 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில்," மது உள்ளிட்ட போதை பழக்களுக்கு அடிமையாவதை விட சமூக வ்லைதளங்களுக்கு இவர்கள் எளிதில் அடிமையாகி விடுகிறார்கள். தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சமூகவலைளதங்களில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், இன்ஸ்டாகிராம் முதல் இடத்தில் உள்ளது. அதிகமான அளவில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குஅடுத்த இடத்தில், ஸ்நாப்சேட் உள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது

தமிழகத்தை நோக்கி நகரும் Wanna cry வைரஸ்


கணிணி உலகையே அதிர வைத்த ரான்சம்வேர் வைரஸ் மிக விரைவில் தமிழக கணிணிகளில் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
ரான்சம்வேர் வைரஸ் இணைய உலகை அதிரவைத்த கணிணி வைரஸ். கடந்த மூன்று தினங்களாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா முழுமைக்கும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் இருவரது கணிணியை முதலில் தாக்கும் . பின்னர் கணிணியில் உள்ள கோப்புகளை முடக்கும் இந்த வைரஸ் , 300 டாலர்களை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையேன்றால் ஒரு வாரத்திற்குள் இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும். இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியாவிட்டால் ஒரு வாரத்திற்குக்கு பிறகு நம்முடைய கோப்புகளை இந்த வைரஸ் அழித்து விடும்.

இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் , குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள அரசு அலுவலக கணிணிகளை இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த் வைரஸ் தமிழக அரசு அலுவலக கணிணியை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கணிணியை பயன்படுத்துவோர் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கணிணி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Sunday 21 May 2017

ரான்சம்வேர் (WANNA CRY)

கணிணி உலகையே அதிர வைத்த ரான்சம்வேர் வைரஸ் மிக விரைவில் தமிழக கணிணிகளில் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
ரான்சம்வேர் வைரஸ் இணைய உலகை அதிரவைத்த கணிணி வைரஸ். கடந்த மூன்று தினங்களாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா முழுமைக்கும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் இருவரது கணிணியை முதலில் தாக்கும் . பின்னர் கணிணியில் உள்ள கோப்புகளை முடக்கும் இந்த வைரஸ் , 300 டாலர்களை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையேன்றால் ஒரு வாரத்திற்குள் இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும். இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியாவிட்டால் ஒரு வாரத்திற்குக்கு பிறகு நம்முடைய கோப்புகளை இந்த வைரஸ் அழித்து விடும்.
இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் , குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள அரசு அலுவலக கணிணிகளை இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த் வைரஸ் தமிழக அரசு அலுவலக கணிணியை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கணிணியை பயன்படுத்துவோர் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கணிணி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


|நன்றி : விகடன் டிவி|
VIDEO :
https://www.facebook.com/alexpcs.blogspot.in/videos/630096707197787/

கூகுள் லென்ஸ்


கூகுள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பாக கூகுள் லென்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மேம்ப்பாட்டாளர்கள் கூட்டம் ஆண்டுக்காண்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான மேம்பாட்டாளர்கள் கூட்டம் அமெரிக்காவில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கூகுள் லென்சுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டார். இந்த கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை நாம் கேமராவில் காட்டும் போது அந்த பொருள் பற்றிய விவரங்களை பெறலாம்.

அதாவது ஒரு பூவை கூகுள் லென்ஸ் காமிராவில் காட்டினால், அந்த பூவின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வரும். மேலும் ஒரு ஹோட்டலின் தோற்றைத்தை கூகுள் லென்ஸ் காமிராவில் காண்பித்தால் அந்த ஹோட்டலின் ரேட்டிங் என்ன ? அதில் என்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விபரங்களை கூகுள் லென்ஸ் தரும்.

ஜீமெயில்



கூகுள் நிறுவனம் தனது ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் பயனர்களின வேலையைச் சுலபமாக்கும் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜீமெயில் மின்னஞ்சல் சேவை உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில ஒன்றாக உள்ளது. இதன் மொபைல் அப்ளிகேஷனில் கூகுள் நிறுவனம் பல புதிய வசதிகளைப் புகுத்தி வருகிறது.
அதன் அங்கமாக, ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் ஸ்மார்ட் ரிப்ளை என்ற புதிய அம்சத்தை இணைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான அப்ளிகேஷனில் சமீபத்திய அப்டேட் மூலம் இந்த வசதி கிடைக்கும்.
இதன் மூலம், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது எளிதாகிறது. பொதுவாக அதிகம் பேர் பரவலாக பயன்படுத்தும் பதில்களை ஜீமெயில் பரிந்துரைக்கும். இதனால், டைப் செய்ய அவசியமில்லாமல், தயாராக பரிந்துரைக்கும் பதில்களில் ஒற்றை அனுப்பிவிடலாம். மெசேஜ் அனுப்புவதில் உள்ள டெம்பிளேட் மெசேஜ் போலவே இது இருக்கும்.
பல புதிய அப்பேட்களை அறிமுகம் செய்துவரும் கூகுள் அண்மையில் ஜீமெயில் மூலமாகவே பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் லிங்க் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.


வாட்ஸ் ஆப்பில் 'I love the new colours for WhatsApp' என்ற குறிப்புடன் லிங்க் ஒன்று வந்தால் உஷாராக இருக்க வேண்டும். இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்தால் வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்த ஒரு அப்ளிகேஷனை நிறுவச் சொல்லும்.
அதற்கு முன்பாக, உங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய (வெரிஃபிகேஷன்) நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று கூறும். இதற்கு ஒப்புதல் அளித்தால், உங்களுக்கு வந்ததைப் போலவே உங்கள் நண்பருக்கும் மெசேஜ் அனுப்பப்படும்.
அதற்குப் பிறகும், கம்ப்யூட்டருக்கான கூகுள் குரோமில் மட்டுமே வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்தலாம் என்று கூறி, BlackWhats என்ற குரோம் எக்ஸ்டென்ஷனை பதிவிறக்குமாறு கேட்கும். அதைப் பதிவிறக்கி கலர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்.
ஆனால், இது வாட்ஸ் ஆப்பின் அதிகாரப்பூர்வமான வெளியீடு இல்லை. இதன் மூலம் பயன்படுத்துபவரிடம் உள்ள தகவல்கள் திருடப்படலாம். இதைத் தவிர்ப்பதும் எளிது. உங்களுக்கு வரும் லிங்க் சிரில்லிக் எனப்படும் ஆங்கிலத்தைப் போலவே இருக்கும் எழுத்துக்களில் இருக்கும். அதை சற்று கவனமாகப் பார்த்து தவிர்த்துவிடவும். இதுபோன்ற, லிங்க் மூலமாகவே ரான்சம்வேர் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்காக இருப்பது நல்லது.

எதிர்காலத்தில் மறக்கவே மாட்டீங்க!

வருகிறது ஈமோஜி பாஸ்வேர்டு
அடிக்கடி உங்களது பாஸ்வேடை மறந்துவிடுகிறீர்களா? இனிமேல் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஈமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்த புதிய வசதி வரவுள்ளது.
எமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வசதியை ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கொண்டு வரும் முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி, எந்த முறையில் பயன்படுத்தலாம் என்ற தீவிர முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பயனாளர்கள் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும், ஜாலியான உணர்வு ஏற்படும்.
பின் நம்பர்களை எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஈமோஜியை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்காக 6 வேறு வேறு வகையான ஈமோஜியை பயன்படுத்தலாம். இதனை யாராலும் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், அவர்கள் நினைவில் கொள்ள முடியாது.
ஆனால் ஈமோஜியைப் பொருத்தவரை 6 வேறுவேறு வகையான ஈமோஜிகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பார்த்தாலும் அவர்கள் நினைவில் கொள்வது கடினம்.

ஆண்ட்ராய்டை விரட்டியடிக்க வருது புது ஓ.எஸ்

 கூகுள் புது தொழில்நுட்பம்
உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. இது பயன்படுத்துவோருக்கு எளிதாக இருப்பதாலும், இலவசமாகவும், குறைந்த விலை போன்களில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் அதிக நபர்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது.
அதோடு பல்வேறு புதிய வசதிகளை கொடுப்பதோடு, புதுப்புது அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பப் படுகிறது.
தற்போது கூகுள் நிறுவனம் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு (Operating System-OS)பதிலாக புதிய ஓ.எஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் நிறுவனம் மிக ரகசியமாக புதிய OS உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கூகுளின் இந்த புதிய OS, புஜ்சியாவை அடிப்படையாக கொண்ட Ars Technica என்ற நிறுவனத்தின் யோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது இதன் யூசர் இண்டர்பேஸ்க்கு ஆர்மடில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் OS க்கு பெயரிடப்படவில்லை.
இந்த OS புதிய மொபைல் போன்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமையும் என கூறப்பட்டுள்ளது. சிறிய கம்ப்யூட்டர் போல செயல்படும் என்பதோடு, அதன் வேகம் அசாதரணமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த OSன் முதல் பக்கத்தில் நாம் எப்போதும் பயன்படுத்திவரும் ஆண்ட்ராய்டு போன் போல நம் புகைப்படம் வைத்தல், தேதி, நேரம், ஆகியவற்றோடு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பேட்டரி நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் புதுவித டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதில் கணிணியைப் போல இரு வேறு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.