Thursday 28 December 2017

இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கார்டு அவசியம்?


போலி அக்கவுண்ட்களை முடக்க, ஆதார் எண்ணை பேஸ்புக் அக்கவுண்டில் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டது பேஸ்புக். இதில் பிற நாடுகளை விட இந்தியாவில் தினமும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் பேஸ்புக்கில் பல போலியான பெயர்களில் பல போலியான அக்கவுண்டகள் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு பலபுகார்கள் சென்றுள்ளது.
அதனால் அந்நிறுவனம் இந்த போலி அக்கவுண்ட்களை தவிர்க்க, புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. மொபைல் மூலம் புதிதாக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்க முயற்சிக்கும் போது தற்போது ஆதார் அட்டையில் உள்ள பெயரை பதிவு செய்யும்படி கேட்கிறது.
ஆனால் ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என இதுவரை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. தவிர, மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கும் இதுவரை ஆதார் எண்ணை பேஸ்புக் நிறுவனம் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் திட்டமாக தெரிகிறது.

மீடியாடெக் பிராசசர்


மீடியாடெக் பிராசசர் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பிராசசர் சென்சியோ அறிமுகமாகியுள்ளது.

தற்போது பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பிராசசர் மீடியாடெக் நிறுவனத்துடையது. குவால்காமுக்குப் போட்டியாக இருப்பினும் இரண்டாவது இடத்திலேயே மீடியாடெக் மதிப்பிடப்படுகிறது.


அண்மையில் குவால்காம் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 (Snapdragon 845) பிராசசருக்கு போட்டியாக மீடியாடெக் புதிதாக சென்சியோ என்ற புதிய பிராசசரை களமிறக்கியுள்ளது. இதில் பிரத்யேகமாக பயோ சென்சார் ஒன்று இடம்பெறுகிறது. இதன் மூலம் மொபைலை பயன்படுத்துவரின் உடல்நிலையில் சில மாற்றங்களைக் கண்காணிக்க முடியும்.

ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.



தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம். இதன் சேவை, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏர்செல், பிற நெட்வொர்க் உடன் போட்டி போட இயலவில்லை.

அதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் தனது சேவை உரிமையை புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க உள்ளது.

இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.
இங்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், போர்டபிள் கோரிக்கையை வரும் 2018 மார்ச் 10ஆம் தேதி வரை நிராகரிக்கக் கூடாது என்று ட்ராய் குறிப்பிட்டுள்ளது.

கூகுளின் புதிய இணைய விளம்பரக் கட்டுப்பாடு!


கூகுள் நிறுவனம் இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் குரோம் புரோசர்களின் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்தியாவில் 90 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே கொண்டிருக்கின்றன. அவை அனைத்திலும் குரோம் புரோசர் உள்ளது.

இப்படி இருக்கு கூகுளின் விளம்பரக் கட்டுப்பாடு சிறு இணையதள நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இது கூகுளின் 'சர்வாதிகாரப்போக்கு' என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விளம்பரத் கட்டுப்பாட்டை குறிப்பிட்ட பயனாளர் தனது மொபைலில் ஆஃப் செய்து வைக்கும் அம்சமும் இருக்கும் என்றும் கூகுள் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.