Thursday 28 December 2017

ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.



தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம். இதன் சேவை, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏர்செல், பிற நெட்வொர்க் உடன் போட்டி போட இயலவில்லை.

அதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் தனது சேவை உரிமையை புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க உள்ளது.

இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.
இங்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், போர்டபிள் கோரிக்கையை வரும் 2018 மார்ச் 10ஆம் தேதி வரை நிராகரிக்கக் கூடாது என்று ட்ராய் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment