Thursday 28 December 2017

இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கார்டு அவசியம்?


போலி அக்கவுண்ட்களை முடக்க, ஆதார் எண்ணை பேஸ்புக் அக்கவுண்டில் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டது பேஸ்புக். இதில் பிற நாடுகளை விட இந்தியாவில் தினமும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் பேஸ்புக்கில் பல போலியான பெயர்களில் பல போலியான அக்கவுண்டகள் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு பலபுகார்கள் சென்றுள்ளது.
அதனால் அந்நிறுவனம் இந்த போலி அக்கவுண்ட்களை தவிர்க்க, புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. மொபைல் மூலம் புதிதாக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்க முயற்சிக்கும் போது தற்போது ஆதார் அட்டையில் உள்ள பெயரை பதிவு செய்யும்படி கேட்கிறது.
ஆனால் ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என இதுவரை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. தவிர, மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கும் இதுவரை ஆதார் எண்ணை பேஸ்புக் நிறுவனம் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் திட்டமாக தெரிகிறது.

No comments:

Post a Comment