Thursday 10 September 2015

இந்தியாவில் இலவச வை-பை : கூகுள் முடிவு..!


கூகுள் நிறுவனத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படும் கூகுள் ஃபைபர் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீட்டிக்கப்படுகின்றது. ஹைத்ராபாத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தெலுங்கானா அமைச்சர் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முழுவதும் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இயங்கும் முக்கிய ரயில் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கூகுள் நிறுவனம் இந்திய ரியல்வேயுடன் இணைந்து ப்ராஜக்ட் நீலகிரி எனும் திட்டத்தின் முதல் கட்டமாக நான்கே மாதங்களில் இந்தியாவின் சுமார் 400 ரயில் நிலையங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் இலவச இண்டர்நெட் பயன்படுத்த தங்களது மொபைல் நம்பரினை வெரிஃபை செய்து, ஒரு முறை மட்டும் கடவு சொல் என்டர் செய்து இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்கு இண்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும் பின் நேரம் அதிகரிக்க இண்டர்நெட் வேகம் குறைய ஆரம்பிக்கும் ஆனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்த இலவச இண்டர்நெட் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment