Monday 31 August 2015

7.5 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10

விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள், 7.5 கோடி சாதனங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 90 ஆயிரம் தனிப்பட்ட மாடல் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் அடங்கும். 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில கம்ப்யூட்டர் மாடல்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியுள்ளன.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் உள்ள பெர்சனல் அசிஸ்டண்ட் 'கார்டனா', இதுவரை “tell me a joke” என்ற கட்டளைக்கு 5 லட்சம் ஜோக்குகளைச் சொல்லியுள்ளது. விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பல லட்சம் அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஜூலை 29 அன்று வெளியானது விண்டோஸ் 10. முதல் நாளிலேயே, இந்த சிஸ்டத்தினை 1.4 கோடி சாதனங்கள் ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கின. இரண்டு வாரங்களில், 13 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், விண் 10ல் இயங்குவது தெரிய வந்தது. ஆகஸ்ட் 26, ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னால், 7.5 கோடி சாதனங்களில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
விண்டோஸ் 10, Home, Pro, Enterprise and Education என நான்கு வகைகளில் கிடைக்கிறது. இலவசமாக இதனைத் தரவிற்க்கம் செய்திடும் உரிமை இல்லாதவர்கள், விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில், விண்டோஸ் 10 ஹோம் ரூ.7,999 மற்றும் விண்டோஸ் 10 ப்ரோ ரூ. 14,999க்கும் கிடைக்கிறது. நீங்கள் வாங்க விரும்பினால் http://www.microsoftstore.com/store/msin/en_GB/cat/categoryID.70039000 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2018 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 இயங்க வேண்டும் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்காகும். இதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மைக்ரோசாப்ட் எடுக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், புதிய பிரைவசி கொள்கையினைப் பயனாளர்கள் பலர் எதிர்த்து வந்தனர். இவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், http://windows.microsoft.com/en-us/windows-10/windows-privacy-faq என்ற இணைய தளத்தில், விரிவாகத் தன் கொள்கை பற்றி மைக்ரோசாப்ட் விளக்கியுள்ளது.

No comments:

Post a Comment