Friday 28 August 2015

விண்டோஸ் பேட்ச் பைல்

4qLs8Vu.jpg


சென்ற வாரம், மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்கள் எவற்றையேனும் கைப்பற்றி உள்ளனரா என்று தெரியாத நிலையில், அதற்கான தீர்வு தரும் பேட்ச் பைல் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

இது குறித்த https://technet.micr...curity/MS15-093 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, அவர்களைக் கவிழ்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டால், உடன் ஹேக்கர்கள் அவர்கள் கம்ப்யூட்டர்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்வது எளிதாகிவிடும். 

இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள ஒரு குறைபாடு தான். இந்த குறைபாட்டினை, மைக்ரோசாப்ட் CVE-2015-2502 எனக் குறிப்பிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெமரியில் உள்ள ஆப்ஜெக்ட்களைக் கையாளுகையில், இந்த குறை வெளியே அறியப்படுகிறது.  அந்த குறையை, ஹேக்கர்கள் பயன்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்திட முடியும். அப்போது கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனாளருக்குரிய உரிமையினை ஹேக்கர் பெற முடியும். எனவே, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் யாரேனும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், இந்த குறைபாடு இயங்கினால், கம்ப்யூட்டர் பின் அவருக்குக் கட்டுப்படாமல் போய்விடும். 

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் எட்ஜ் பிரவுசரில் இந்த குறைபாடு இல்லை எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த பேட்ச் பைல் https://support.micr...n-us/kb/3087985 என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் தரப்படுகிறது. தானாக, இது அப்டேட் செய்யப்படவில்லை எனில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கி வைத்துக் கொள்வது நல்லது.  இந்தக் குறையைக் கண்டறிந்தவர் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் Clement Lecigne என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான வெளியீட்டு நாள் இல்லாமல், அதிரடியாக இது போல பேட்ச் பைல் வெளியிடுவது, இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து உடனுடக்குடன் தீர்த்து வைக்கும் வாடிக்கையாளர் சேவையைனை மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு, எட்ஜ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்

No comments:

Post a Comment