Friday, 27 February 2015

அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்குVivaldi பிரவுசர்:


ஒரு பிரவுசரை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது புதிதாக மாற்று பிரவுசரை பயன்படுத்தி பார்க்க நினைத்தாலோ அதற்கான காலம் வந்துவிட்டது. விவால்டி Vivaldi எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி உள்ளது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு என்ற அடைமொழியுடன் இந்த பிரவுசர் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஓபரா பிரவுசரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஒ ஜான் வான் டெட்ஸ்னர் தலைமையிலான குழு இந்த புதிய பிரவுசரை உருவாக்கியுள்ளது. பவர் யூசர் எனப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக விவால்டி குழு தெரிவித்துள்ளது.
விவால்டியில் இருக்கும் புதிய அம்சங்களாக, இணையத்தில் உலாவும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ’டேப்’களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு வசதியாக இந்த டேப்கள் அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்து வைக்கும் வசதி அமைந்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். அதே போல அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை உடனடியாக பயன்படுத்தும் ஸ்பீடு டயல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இணையத்தை பயன்படுத்தும் போது, பிரவுசரிலெயே அந்த இணையதளங்கள் பற்றி குறிப்பெடுத்து வைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு இணையதளத்தை ஏன் பயன்படுத்தினோம் என்பதை எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதே போல குவிக் கமாண்ட்ஸ் மூலம் பல அம்சங்களை உடனடியாக பயன்படுத்தலாம். இவை எல்லாமே இணையத்தை அதிகம் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் தற்போது தொழில்நுட்ப முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவடிவம் அறிமுகமாக உள்ளது.
Link https://vivaldi.com/download/Vivaldi_TP_1.0.83.38.exe
ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும், நாம் சில ஷார்ட்கட் கீ தொகுப்புகளை மட்டுமே நினைவில் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். சிலவற்றை, அவை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், மறந்து பயன்படுத்தாமல் இருந்து விடுகிறோம். இதற்குக் காரணம், அவை அடிக்கடி பயன்படுத்தப்படாதவையாக இருப்பவை; அல்லது, கீ போர்டில், குறிப்பிட்ட கீகள் சற்று தொலைவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலை. அந்த வகையில் விண்டோஸ் சிஸ்டத்தில், மறக்கப்பட்ட சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் காணலாம்.



1. கண்ட்ரோல் + ஒய் (Ctrl + Y):



நம்மில் பலர், “Ctrl + Z” கீகளைப் பயன்படுத்தினால், அப்போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு நீக்கப்படும் என அறிந்திருக்கிறோம். இது பல வேளைகளில் நமக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இதே போல “Ctrl + Y” என்ற கீ தொகுப்பும் உள்ளது என்று ஒரு சிலருக்கே தெரியும். அவர்களும் இதனைப் பயன்படுத்துவது இல்லை. இந்த கீ தொகுப்பு, நாம் மேலே சொன்னபடி, நீக்கப்பட்ட செயல்பாட்டினை, மீண்டும் கொண்டு வரும். இதனால், நாம் தவறுதலாக, முன்பாக மேற்கொண்ட செயலை நீக்கிவிட்டால், அதனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இந்த கீ தொகுப்பு பயன்படுகிறது. இது பல வேளைகளில், நம் வேலைக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும். எனவே, இதனை மறந்திடாமல், மனதில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்த வேண்டும்.



2. விண்டோஸ் + பிரேக்/ பாஸ்



(Win + : உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் கட்டமைப்பு தகவல்கள் குறித்து அறிய, நாம் கண்ட்ரோல் பேனலில் இருந்து நேரடியாகப் பெறுகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது. “Win + X” என்ற கீகளை அழுத்தி, கிடைக்கும் பட்டியலில், “System” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். ஆனால், இதனை இன்னும் எளிமைப் படுத்த, உங்கள் கீ போர்டில், “Win + Pause/Break” அழுத்துங்கள். சிஸ்டம் குறித்த தகவல்கள், பாப் அப் விண்டோவாக எழுந்து வரும்.



3. ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் (Alt + Print Screen):



நம் கீ போர்டில் உள்ள (Prt Scr) கீ, அடிக்கடி, ஸ்கிரீனில் தெரியும் தோற்றத்தினை அப்படியே படமாக மாற்றி எடுக்கப் பயன்படுகிறது. திரைக் காட்சி முழுமையும் இந்த செயல்பாட்டில் காட்டப்படும். இதற்குப் பதிலாக, செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ காட்சி மட்டும் தேவை என்றால், “Alt + Print Screen” கீகளை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் காட்சி, நாம் விரும்பும் செயல்பாட்டை மட்டும் காட்டும் விண்டோ காட்சியாக இருக்கும். இதனால், திரை முழுமையும் காப்பி செய்து, பின்னால், அதனை எடிட் செய்திடும் வேலை மிச்சமாகிறது.



4. விண்டோஸ் + இ (Win + E)



விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படும் ஒரு புரோகிராம் உள்ளது என்றால், அது விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான். பொதுவாக, இதனை ஸ்டார்ட் மெனு இயக்கிப் பெறுகிறோம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள இதன் ஐகானில் கிளிக் செய்கிறோம். அல்லது, திரையில் காட்டப்படும் “My Computer” ஐகான் மீது கிளிக் செய்து பெறுகிறோம். ஆனால், மிக வேகமாக, விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பெற வேண்டும் என்றால், உங்கள் கீ போர்டில், “Win + E” அழுத்துங்கள். இதனைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே இல்லை. ஆனாலும், இது மிக மிகப் பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்பு என்பதில் சந்தேகமே இல்லை.



5. கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl + Shift + N):



புதிய போல்டர் ஒன்றை உருவாக்க, நாம் அனைவரும் பின்பற்றும் வழி, டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, பின்னர் “New > Folder.” எனத் தேர்ந்தெடுப்பதுதான். இதைக் காட்டிலும் எளிய வழி, “Ctrl + Shift +N,” ஆகிய கீகளை அழுத்துவதாகும். இந்த கீகளை அழுத்தினால், உங்களின் புதிய போல்டர் உருவாக்கப்பட்டு, நீங்கள் அதற்கு ஒரு பெயர் கொடுப்பதற்காகக் காத்திருக்கும். கைகளை எடுத்து, மவுஸை இயக்கி, கிடைக்கும் மெனுவில், இதற்கான பிரிவுகளை இயக்கி, போல்டரைப் பெறுவதைக் காட்டிலும், இது எவ்வளவு எளிய, குறைந்த நேரம் எடுக்கும் வழி என தெரிந்து கொள்ளலாம்.



6. விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி + எண்டர் (Win + Right Arrow + Enter):



விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரை, இறுதியாக ஷட் டவுண் செய்திடப் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று --“Win” பட்டன் அழுத்தி, அதன் பின் வலது ஆரோ கீ அழுத்தி, பின்னர் என் டர் பட்டன் அழுத்துவது. இது, ஷட் டவுண் பட்டனில், முதல் ஆப்ஷனைச் செயல்படுத்தும். இந்த கீ செயல்பாடு விண்டோஸ் 8 மற்றும் 8.1 ல் செயல்படாது. விண்டோஸ் 10ல் செயல்படும் என்று எதிர்பார்ப்போம்.



7. விண் + அம்புக் குறி கீகள் (Win + Arrow Keys):



உங்களிடம் மிகப் பெரிய கம்ப்யூட்டர் திரை இருந்தால், செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, திரையின் ஏதாவது ஒரு பக்கத்திற்குக் கொண்டு செல்லலாமே. இதனால், பின்னும் முன்னுமாக விண்டோக்களிடையே உலவ வேண்டாமே. பொதுவாக, மவுஸ் பயன்படுத்தி, விண்டோக்களை மூடித் திறக்கலாம். ஆனால், அதே நேரத்தில், “Win + Arrow Keys” பயன்பாடு, இதே செயல்பாட்டினைத் தரும். எந்த அம்புக் குறி கீயை அழுத்துகிறீர்களோ, அதற்கேற்ப விண்டோஸ் ஒதுங்கிக் கொடுக்கும்.



8. விண் + டேப் (Win + Tab):



விண்டோவில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களுக்கிடையே சென்று வர, நாம் ஆல்ட் + டேப் கீகளைப் பயன்படுத்துகிறோம். இதே செயல்பாட்டினை, விண்டோஸ் கீ + டேப் கீ அழுத்தியும் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது.


மேலே சொல்லப்பட்டவை, நம்மால் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால், பயனுள்ள பல ஷார்ட் கட் கீகளாகும். இது போல, இன்னும் பல இருக்கின்றன. இவற்றை அறிந்து பயன்படுத்துங்கள்.
இன்றிலிருந்து இரண்டு வாரங்களில் யூசர்கள் ஜிடாக் மெசன்ஜர் ப்ளாட்ஃபார்மில் இருந்து கூகுள் ஹேங்கவுட்டிற்கு மாற வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மில்லியன் கணக்கான யூசர்கள் நீண்ட காலமாக ஜிடாக் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் அவை பயனபடுத்துவது மிகவும் எளியதாகவும், வசதியாக உள்ளதால் ஜிடாக்கில் இருந்து வேற அப்ளிக்கேஷனுக்கு மாற யூசர்களுக்கு விருப்பமில்லை. ஆனால் கூகுள் நிறுவனம் யூசர்கள் ஜிடாக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கூகுளின் எதிர்காலம் ஹேங்கவுட், எனவே, ஜிடாக் எடுத்து விடுவது மிகவும் தர்க்க ரீதியான விஷயம் -ஆகும். கூகுளின் டெஸ்க்டாப் அப்ளிக்கேஷனின் ஆதரவை (பாதுகாப்பு மற்றும் பதிப்பு) எடுக்க வேண்டும் என்று முடிவெடித்துள்ளபோது ஜிடாக் நிறுத்தப்படுவது பற்றி வெளியே தெரிய வந்துள்ளது. IM சேவை முற்றிலும் ஹேங்கவுட் அப்ளிக்கேஷனாக மாற்றப்படவுள்ளதால், இதை குரோம் வெப் ப்ரவுசர் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஜிடாக் பிப்ரவரி மாதம் 16ம் தேதியுடன் முற்றிலும் நிறுத்தப்படுகிறது என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்குட்டை போலவே ஜிடாக் சேவையும் வரும்காலத்தில் வரலாறாக இருக்கும். வாட்ஸ்ஆப் தற்போது பிசி வரைக்கும் வந்துள்ளதால் ஜிடாக் அநாவசியமானதாக மாறியது. அதனால் கூகுள் ஹேங்கவுட்டில் இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டராக்டிவ் மற்றும் விஷுவல் அப்பிளிங் போன்ற வசதிகளை வழங்கவுள்ளது.
பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே தன்னிடமிருந்து நீக்கியது. வேறு சில பிரவுசர்களும் இதே போல சிலவற்றைத் தள்ளி வைத்தன.


ப்ளக் இன் புரோகிராம்கள் மோசமானவையா?


ஆம், மோசமானவையே. இப்போது பிரவுசர்கள் அனைத்து வகையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனுடன் கிடைக்கின்றன. முன்பு பலவகை விடியோ பைல்களை இயக்க, விடியோ சேட்டிங் வசதியைத் தர, அனிமேஷன்களை இயக்க, பிரவுசர்களுக்குள்ளாக கேம்ஸ் விளையாட எனப் பல செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் தற்போது பிரவுசர்களே இயக்கும் வகையில் உள்ளன. இணைய தளங்கள், இப்போது, பிரவுசர் தரும் இந்த டூல்களைப் பயன்படுத்துகின்றன. எனவே, ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படுவதில்லை.

மேலும் ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் மிகப் பழசாக உள்ளன. பயர்பாக்ஸ் NPAPI எனப்படும் ப்ளக் இன் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆக்டிவ் எக்ஸ் புரோகிராமினைப் பயன்படுத்துகிறது. இந்த ஆக்டிவ் எக்ஸ், பல வகை வைரஸ்களுக்கு வழி தருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. குரோம் பிரவுசர் PPAPI, என்ற வகை ப்ளக் இன் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், இதுவும் சரியல்ல. ஹேக்கர் ஒருவர் இதில் பிழையான குறியீடுகளைக் கண்டறிந்தால், அதன் வழி மிகப் பெரிய சேதம் விளைவிக்கக் கூடிய வைரஸ் அல்லது மால்வேர் தொகுப்புகளை அனுப்ப முடியும்.

பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள், ஆட் ஆன் தொகுப்புகளிடமிருந்து மாறுபட்டவை. எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களிடமிருந்தும் மாறுபட்டவை. இவை, நாம் பயன்படுத்தும் பிரவுசருக்குக் கூடுதலாக ஒரு பயன்பாட்டினைத் தருகின்றன. அந்தப் பயன்பாட்டினை நாம் மேற்கொண்டு செயல்படுத்தலாம். ஆனால், ப்ளக் இன் என்பது, இணையதளங்கள் செயல்படத் தேவையான புரோகிராம்களாகும். பிரவுசர்கள் வேகமாகச் செயல்பட முடியாத காலத்தில் (எடுத்துக் காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6) இவை தேவைப்பட்டன. இப்போது இவற்றிற்கான தேவை இல்லை.


தேவைப்படாத ப்ளக் இன்:



இணையத்திலிருந்து ப்ளக் இன் புரோகிராம்கள் முழுமையாக மறையாது. இப்போது கூட, நாம் சில இணைய தளங்களைக் காண்கையில், அவற்றில் உள்ள பழைய விடியோ புரோகிராம்களைக் காண, ரியல் பிளேயர் போன்ற ப்ளக் இன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்கும்.

பெரும்பாலான ப்ளக் இன் புரோகிராம்கள், இன்றைய பிரவுசர்களில் ஒருங்கிணைக்கப்பட்டு கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, ஆடியோ மற்றும் விடியோ பெற, கூகுள் தந்த கூகுள் டாக் ப்ளக் இன் புரோகிராம் இப்போது தேவைப்படுவதில்லை. அதே போல, கூகுள் மேப்ஸ் புரோகிராமில், கூகுள் எர்த் ப்ளக் இன் புரோகிராம் தேவைப்படுவதில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஸ்கைப் புரோகிராமின் புதிய பதிப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதில், ஸ்கைப் பிரவுசர் ப்ளக் இன் தேவைப்படாது. இப்போதெல்லாம் QuickTime, RealPlayer, Windows Media Player, and the VLC Web Plugin போன்ற ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படுவது இல்லை. பிரவுசர்கள் அல்லது தனியான புரோகிராம்கள் இவற்றின் தேவைகளை நிறைவேற்றுகின்றன.
ப்ளக் இன் புரோகிராம்களைக் கண்டறிதல்:


நம் பிரவுசரில் பல ப்ளக் இன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருப்போம். சிலவற்றை அறிந்து செய்திருப்போம். சில, நாம் அறியாமலேயே, சிஸ்டத்தில் பிரவுசருக்குள் வந்திருக்கும். எவை எவை உள்ளன என்று எப்படி அறிவது? இங்கு சில பிரவுசர்களில் அவற்றைக் கண்டறியும் வழிகள் தரப்பட்டுள்ளன.
குரோம்:



குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் “chrome://plugins/” என டைப் செய்திடவும். உடன் உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ப்ளக் இன் புரோகிராம்கள் பட்டியல் கிடைக்கும். இதில் தேவைப்படாதவை இருப்பின் நீக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. Settings>Show advanced settings>Content settings>Disable individual plugins எனச் சென்று கண்டறியலாம்.

பயர்பாக்ஸ்:


மெனு பட்டனில் கிளிக் செய்து Manage add-ons என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Plug-ins ஐகானில் கிளிக் செய்திடவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: டூல் பாரில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். “Toolbars and extensions” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். தொடர்ந்து Show பாக்ஸில் கிளிக் செய்திடவும். அடுத்து All add-ons என்பதில் கிளிக் செய்திடவும்.



சபாரி:



மெனுவில் கிளிக் செய்திடவும். Preferences என்பதனைத் தேர்ந்தெடுத்து, Security ஐகானில் கிளிக் செய்திடவும். “Internet plug-ins.” என்பதற்கு வலது பக்கமாக இருக்கும் Website Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.
ஆப்பரா:


ஆப்பரா மெனுவில் கிளிக் செய்திடவும். Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Websites category தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், “Disable individual plugins.” என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது பிரவுசர் முகவரிக் கட்டத்தில் “opera://plugins” என டைப் செய்து என்டர் தட்டவும்.

நமக்கு ஏதேனும் ஒரு ப்ளக் இன் புரோகிராம் தேவைப்படவில்லை என்று உணர்ந்தால், குறிப்பாக பழைய ப்ளக் இன் புரோகிராம்கள் தேவை இல்லை என உணர்ந்தால், அவற்றை நீக்க வேண்டும். இவற்றை நீக்க கண்ட்ரோல் பேனல் சென்றுதான் நீக்க முடியும். அது அமைக்கப்பட்டுள்ள பிரவுசரில் இருந்து கொண்டு நீக்க முடியாது.

ஒரு ப்ளக் இன் புரோகிராம் உங்களுக்குத் தேவைப்படுமா என்ற சந்தேகம் உள்ளது என்றால், அதன் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அது தேவைப்படுகிறதா எனக் கண்காணிக்கலாம். இதற்கு, பிரவுசரின் ப்ளக் இன் மேனேஜர் பக்கம் செல்ல வேண்டும். அங்கு காணப்படும் Disable பட்டனில் கிளீக் செய்திட வேண்டும். செயல் முடக்கப்பட்ட பின்னும், உங்கள் பிரவுசர் வழக்கம் போல இயங்கி, அனைத்து இணைய தளங்களைக் காட்டுகிறது என்றால், அந்த ப்ளக் இன் புரோகிராம் தேவை இல்லை என்றாகிறது. உடன் கண்ட்ரோல் பேனல் சென்று, இதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.


நாம், நம் வசதிக்கேற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களின் வகை அமைப்பினை (Profile) அமைக்கலாம். ஒன்றில் முடக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம், இன்னொன்றில் செயல்படும்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பல சலுகைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. பல பயனுள்ள இணைய தளங்களை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதியினை வழங்குகின்றன. Internet.org என்ற அப்ளிகேஷன் மூலம், 30க்கும் மேற்பட்ட இணைய தளங்களை இலவசமாக அணுகிப் பயன்படுத்தலாம். செய்திகள், தாய்மை நலம், பயணங்கள், சுற்றுலா, வேலை வாய்ப்புகள், விளையாட்டு செய்திகள், தொலை தொடர்பு மற்றும் அரசு தகவல்களை எந்தவித 2ஜி அல்லது 3ஜி கட்டணம் இன்றிப் பெறலாம்.

தற்போது இணைய இணைப்பினைப் பெறாமல் அல்லது பெற முடியாமல் இருக்கும் 500 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பினை வழங்குவதைத் தன் இலக்காகக் கொண்டுள்ளதாக முன்பு பேஸ்புக் அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் ஒரு முயற்சியாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Internet.org என்னும் தன் அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை இணைய வசதியினை இலவசமாகப் பெறலாம். தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலம், குஜராத், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இது அறிமுகமாகியுள்ளது. 35க்கும் மேற்பட்ட இணைய சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த தளங்கள், இணைய அலைக்கற்றையில் குறைந்த அளவே பயன்படுத்துகின்றன. மேலும் மொபைல் போன்களுக்கேற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அடிப்படை பயன்களை வழங்கக் கூடிய இணைய தளங்களுக்கு இதன் மூலம் இலவச இணைய இணைப்பு கிடைக்கும். மற்றபடி பொதுவான, கட்டற்ற இணைய இணைப்பு வழங்கப்பட மாட்டாது. விக்கிபீடியா, வேலை வாய்ப்பு குறித்து தகவல் தரும் தளங்கள், சீதோஷ்ண நிலை குறித்து தகவல் தரும் தளங்கள், விளையாட்டு, செய்திகள் மற்றும் தன் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய தளங்களில் கிடைக்கும் சேவை இந்த இலவச இணைய இணைப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் இவை படிப்படியாக அமல்படுத்தப்படும். மேலும் பல இணையதளங்கள் இந்த இலவசப் பட்டியலில் இணைக்கப்பட்டு கூடுதல் பயன்கள் மக்களுக்குக் கிடைக்கும். இன்னும் 90 நாட்களில் இந்தியா முழுவதும் இந்த இலவச சேவை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் Internet.org Android என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் இந்த சேவைகளை அனுபவிக்கலாம். இது www.internet.org என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆப்பரா மினி பிரவுசரின் தொடக்க திரையிலேயே இந்த தளம் கிடைக்கிறது. அல்லது வாடிக்கையாளர்கள், இந்த சேவையைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளைப் பெற 180030025353 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பேசலாம்.

எந்தவிதமான இணைய இணைப்பிற்கான டேட்டா திட்டமும் இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் இதனைப் பெறலாம். இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கின்றன. இந்த திட்டம் ஒவ்வொருவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை உலகில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது. இதற்கு முன் இது போன்ற இலவச இணைய திட்டத்தினை கொலம்பியா, ஸாம்பியா, கென்யா மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த இலவச சேவையைத் தொடங்கி வைத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குர்தீப் சிங் பேசுகையில், இதன் மூலம் இணைய இணைப்பில் செயல்படும் இந்தியக் குடி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும், இவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதனால், கல்வி, தகவல் தொடர்பு, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் செயல்பாடுகள் மக்களிடையே அதிகரித்து, அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்திடும் என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் பேசுகையில், இந்த சேவை இணையத்தை இன்னும் பல லட்சம் இந்தியர்களிடையே கொண்டு செல்லும் என்றார். இணையம் வழி ஒவ்வொரு இந்தியரும் இணைவதற்கு நல்லதொரு கருவியாக இந்த சேவை இருக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என்றார்.
நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம். பீம் டெலி நிறுவன ம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது.

இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது. மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது.

விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது. ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது. தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது. இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்பது என்ன?

பேஸ்புக் நிறுவனம், பெரிய அளவில் இயங்கும் மொபைல் போன் நிறுவனங்களுடனும், சாம்சங் எரிக்சன் மீடியா டெக், நோக்கியா, ஆப்பரா சாப்ட்வேர் மற்றும் குவால்காம் போன்ற மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து, 2013 ஆம் ஆண்டில், Internet.org என்பதை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், வளரும் நாடுகளில் இணைய சேவைகளை முன்னேற்றமடையச் செய்வதுதான்.


இணையம் என்பது நம் வாழ்க்கையின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்றாக மாறிய பின்னர், பல நாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே இணைய இணைப்பு பயன்பாடு உள்ளது என்பது, அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதாகும். இலவச இணைப்பினை இந்த நாட்டின் மக்களுக்குத் தரும்போது, இந்த தடையை நீக்குவதாக அமையும். பேஸ்புக் சமூக தளம் இந்த இணைப்பினை வழங்கும்போது, இலவசமாகத் தகவல் பரப்புதல் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு இடையே தொடர்பு அதிகமாகும். இந்த தகவல் ஓட்டமும், மக்கள் இணைப்பும் நிச்சயமாய் நல்ல பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம், பேஸ்புக் உலக அளவில் 400 கோடி மக்களை இணைக்க முயற்சிக்கிறது.




இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு என்ன லாபம்?

வளரும் நாடுகளில், இந்த Internet.org முயற்சி மக்களுக்கு ஒரு கவர்ச்சியான விஷயமாகும். இதனால், பேஸ்புக் தளம் மக்களிடையே அதன் இலக்கினையும் தாண்டி வளர்ச்சி அடைகிறது. இந்த முயற்சியின் மூலம், பல வளரும் நாடுகளில் ஆழமாகப் பதிகிறது. இந்த நாடுகள், தகவல் தொழில் நுட்பத்தில் வளரும் நாடுகள் ஆகும்.

இந்த வகையில் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் அளவில் வளர்வதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா உலக அளவில் மூன்றாவது இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 24.3 கோடி பேர் இணையத்தில் உலா வருகின்றனர். இருப்பினும் இந்திய ஜனத்தொகையில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பவர்களுக்குச் சரியான முறையில், வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை. கிராமப் புறங்களில் இணையப் பயன்பாடு 19 சதவீதமே உள்ளது என்ற தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால், சீனா போன்ற நாடுகளில் கிராமப் புற இணையப் பயன்பாடு 46 சதவீதமாக உள்ளது என்ற தகவல், இந்தியாவில் இதை உயர்த்த ஏதாவது முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது.

இதனை உயர்த்த வாய்ப்புகள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 14% வளர்ச்சியைத் தற்போது இந்தியப் பயனாளர்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு 40% அதிகரித்து வருகிறது. இது சீனாவிலும், பிரேசில் நாட்டிலும், 25% அளவிலேயே உள்ளது என்ற நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா இணையப் பயன்பாட்டினை அதிகரிக்கலாம் என்பதே, பேஸ்புக் நிறுவனத்தின் திட்டமாக உள்ளது. இதனால், பேஸ்புக் வளர்ச்சி அடைவதுடன், விளம்பரங்கள் சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். பேஸ்புக் தளத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு இது உதவிடும். தற்போது பேஸ்புக் தளத்தின் வருமானத்தில், விளம்பரங்கள் பெரிய அளவில் பங்கெடுத்துள்ளன. விளம்பரதாரர்களுக்கும் இந்த முயற்சி அதிக வாய்ப்புகளை அளிக்கும்.

இந்தியாவில், ஏறத்தாழ 12 கோடி பேர் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியின் அடிப்படையில், உலகிலேயே 100 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட தளமாக வளர இதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. வரும் நாட்களில், Internet.org பேஸ்புக் தளம் மற்றும் இந்திய இணையப் பயனாளர்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கினைக் கொண்டிருக்கும். இது, மற்ற நாடுகளிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள பேஸ்புக் தளத்திற்கு உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.



எந்த மக்கள் பயனடைவார்கள்?

Internet.org வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவையினைப் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர மாநிலம், தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் இருக்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் முதல் கட்டத்தில் இந்த வசதியினைப் பெறுகிறார்கள். இந்த தொலைதொடர்பு மண்டலங்களில் இயங்கும் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும், இந்த திட்டம் இலக்கு வைப்பது, எந்தவித டேட்டா திட்ட இணைய இணைப்பும் இல்லாமல் இருக்கும் கிராமப் புற மக்களைத்தான். இவர்களுடன், இணைய இணைப்பிற்கான திட்டங்களுக்குச் செலவு செய்திட வசதியில்லாமல் இருப்பவர்களையும் இந்த திட்டம் முக்கியமாகக் குறி வைத்துள்ளது.

இவர்கள் 40 இணைய தளங்களை இலவசமாக அணுகலாம். தங்களுடைய மொபைல் போனில், ஆப்பரா மினி, அல்லது யு.சி. பிரவுசர் மூலம் Internet.org தளத்தை அணுகி, இந்த வசதியைப் பெறும் வழியைப் பெறலாம்.