Wednesday 21 February 2018

5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!



இந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தில் இருக்கும் 5000 ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை.. ஏர்செல்-இன் உண்மை நிலைய உணர்த்தும் வகையில் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கும் நிர்வாகம் அளித்த எச்சரிக்கையில், மோசமாகக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள், நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் போட்டியின் காரணமாக வர்த்தகமும் தொடர்ந்து குறைந்து வருவதாக ஏர்செல் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.



போட்டியில் அதீத பாதிப்பு மேக்சிஸ் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர்செல் நிறுவனம், டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகம் ஆன பிறகு உருவாக்கிய போட்டியில் ஏர்செல் வர்த்தக அளவுகளிலும் சரி, நிதி நிலையிலும் சரி அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தில் இருக்கும் 5000 ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. ஏர்செல்-இன் உண்மை நிலைய உணர்த்தும் வகையில் நிறுவனத்தில் பணியாற்றும் 5000 ஊழியர்களுக்கும் நிர்வாகம் அளித்த எச்சரிக்கையில், மோசமாகக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள், நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் போட்டியின் காரணமாக வர்த்தகமும் தொடர்ந்து குறைந்து வருவதாக ஏர்செல் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.


மொபைல் டவர்கள் ஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்து தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது. சேவை செய்யும் இடங்களைக் குறைத்துக்கொள்ளும் நிலையில் செலவுகளும் குறையும், இப்படிதான் கடந்த 6 மாத வர்த்தகம் செய்து வருகிறது ஏர்செல்.

No comments:

Post a Comment