Friday 27 February 2015

என்.எப்.சி: அண்மைக் களத் தொடர்பு தொழில் நுட்பம் (Near Field Communication):

எந்த வயர் தொடர்பும் இல்லாமல் தகவல் பரிமாறும், வை பி போன்ற தொழில் நுட்பம் இது. இதன் மூலம் சிறிய அளவிலான டேட்டாவினைப் பரிமாறிக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தினை இயக்கும் இரண்டு டிஜிட்டல் சாதனங்களை, மிகக் குறைந்த தூரத்தில் (சில சென்டிமீட்டர்கள்) வைத்துச் செயல்படுத்தினால், தகவல்கள் பரிமாறப்படும். இந்த தொழில் நுட்பம் இயங்கும் உங்கள் மொபைல் போன் ஸ்கிரீனில் தட்ட வேண்டிய இடத்தில், பணம் செலுத்துவதனைப் பெற்றுக் கொள்ளும், இதே தொழில் நுட்பம் கொண்ட சாதனத்தின் அருகே தட்டினால், உங்களுடைய போனில் உள்ள தகவல் மூலம், பணம் அந்த இன்னொரு சாதனத்திற்கு அனுப்பப்படும் தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். இது ஏறத்தாழ, கிரெடிக் கார்ட் அல்லது ஏ.டி.எம். கார்டினை, வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் ஸ்வைப் செய்து பணம் செலுத்தும் முறையைப் போன்றதாகும். 2015 ஆம் ஆண்டில் வர இருக்கும் அனைத்து மொபைல் ஸ்மார்ட் போன்களும், நிச்சயமாக இந்த தொழில் நுட்பத்தினைக் கொண்டதாகவே இருக்கும். இதற்கான கட்டணம் செலுத்துதலை ஏற்றுக் கொள்ள ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவைப்படும். இது இந்தியாவிற்கு வருவதற்கும், பயன்பாட்டில் பரவுவதற்கும் சற்று காலம் எடுத்துக் கொள்ளும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment