Saturday 21 March 2015

வாட்ஸ்ஆப் கேலரியில் இருக்கும் போட்டோ, வீடியோக்களை மறைத்து வைக்க தெரியுமா..??


57J6VGi.jpg

அட போனை கொடுப்பா, பார்த்துட்டு கொடுக்குறேன்'னு உங்க போனை வாங்குபவர்கள் வாட்ஸ்ஆப்பில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை நோட்டம் விடுறாங்களா. இதற்கான தீர்வினை தான் இங்க பார்க்க போகின்றீர்கள். வாட்ஸ்ஆப் கேலரியில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கும் படி மறைத்து வைப்பது எப்படி என கீழே பாருங்கள்.

 
ஃபைல் மேனேஜர் :

4HCDdgN.jpg

வாட்ஸ்ஆப் டைரக்ட்ரியை இயக்க உங்களது போனில் ஃபைல் மேனேஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

இன்ஸ்டால் :


AOE6gXm.png


ஒரு வேலை போனில் ஃபைல் மேனேஜர் இல்லை என்றால் இங்கு க்ளிக் செய்து 
ES File Explorer செயலியை பதிவிறக்கம் கீழே செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்ஆப் :

2EtziZc.jpg

ஃபைல் மேனேஜர் இன்ஸ்டால் செய்த பின், அதை ஓபன் செய்து வாட்ஸ்ஆப்பின் மீடியா போல்டருக்கு செல்ல வேண்டும். இதற்கு
ஹோம் >>எஸ்டி கார்டு >> வாட்ஸ்ஆப் >> மீடியா சென்று பார்க்கலாம்.


மீடியா போல்டர் :


X65TAs9.jpg


மீடியா போல்டர் சென்றால் அதன் கீழ் வாட்ஸ்ஆப் இமேசேஜஸ் ‘WhatsApp Images‘ என்ற போல்டர் தெரியும், அதனினை ‘WhatsSpp Images' என்று பெயரை மாற்ற வேண்டும். பெயரை மாற்றும் போது பெயருக்கு முன் புள்ளி இட வேண்டும். பெயரை மாற்றியவுடன் முதலில் ‘.Whatsapp Images‘ போல்டர் காணப்படும்.

 

ரீநேம் :


GXIZNo7.jpg


ES File Explorer செயலியில் பெயரை மாற்ற போல்டரை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும்.


 

கேலரி :

ivKhNMx.jpg

இப்பொழுது கேலரி சென்றால் முன்பு போல் வாட்ஸ்ஆப் இமேஜஸ் அல்லது வீடியோஸ் என போல்டர்கள் இருக்காது.


 

போல்டர்  :
 

iWxjcDV.jpg



முன்பு போல் மீண்டும் போல்டர்கள் தெரிய வேண்டுமானால் பழைய மாதிரி போல்டரை (.) இல்லாமல் ரீநேம் செய்ய வேண்டும்.


 

வேலை :


7rTk5hU.jpg


பொதுவாக ஆன்டிராய்டு லைனக்ஸ் கெர்னல் சார்ந்து இயங்குகின்றது. இதனால் அனைத்து போல்டரையும் பெயருக்கு முன் (.) வைத்தால் அந்த போல்டர் மறைந்து விடும்.


 

இதே முறை :


yKnoZcF.jpg


இதே முறையை அனைத்து போல்டருக்கும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment