ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொருப்பேற்று முதல் முறையாக இந்தியா வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையை இந்த கேள்வி சிரிப்பை தூண்டியது என்றே கூற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தற்கு இந்திய இனிப்பு வகையின் பெயர் சூட்டப்படுமா என்பதே அந்த கேள்வியாகும்.
ஸ்ரீராம் கல்லூரியின் கலந்துரையாடும் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டதோடு சுந்தர் பிச்சைக்கு பரிந்துரை செய்யும் விதமாக பேடா, நெய்யப்பம் உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் கூறப்பட்டன. இதுவரை ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் டோநட், எக்ளேர், ஜின்ஜர் ப்ரெட், ஐஸ் க்ரீம் சான்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மற்றும் மார்ஷ்மல்லோ வரை முற்றிலும் வெளிநாட்டு இனிப்பு வகைகளின் பெயர்களே சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்திய இனிப்பு வகை பெயர் சூட்டக்கூடாது என கேட்க்கப்பட்டதற்கு, எனது அம்மாவை நான் சந்திக்கும் போது அவரிடம் பரிந்துரைகளை கேட்கிறேன், மேலும் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டு பின் ஆண்ட்ராய்டு என் இயங்குதளத்திற்கு பெயர் சூட்டுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்
சீனாவை விட்டு இந்தியா வரும் இந்திய நிறுவனம்.!!
இந்தியவை சேர்ந்த நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அனைத்து மொபைல் போன் கருவிகளையும் இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது மைக்ரோமேக்ஸ் கருவிகளின் விலை இன்னும் குறையும் என்றே கூற வேண்டும்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு கருவிகள் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் பொருத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஹுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மைக்ரோமேக்ஸ் கருவிகளின் 100 சதவீத தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை விட இந்தியாவில் தயாரிப்பு பணிகள் குறைந்த செலவில் முடிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை கருவிகளை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 300 கோடி முதலீடு செய்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மின்னணு தயாரிப்பு சந்தையை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வரும் நிலையில் ஃபாஸ்கான் நிறுவனமும் 500 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனான யு யுடோப்பியா எனும் புதிய கருவியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் !!
உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை தயாரித்துள்ளனர் ஃபார்ம் போட் நிருவனத்தினர் . இதன் மூலம் விவசாயத்தை நவீன முறையில் கையாள தயாராக்கி வருகின்றனர். ஃபார்ம் போட்டை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் முன்னோ அல்லது தோட்டத்திலோ விருப்பமான பயிர்களை வளர்க்கலாம்.
ஃபார்ம் போட் ரோபோட்டுகள் :
திடமான மற்றும் மெல்லிய உருவம் கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில் 5மிமீ தடித்த தகடுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் சக்தி வாய்ந்த NEMA -17 ஸ்டெப்பர் மோட்டார்களுடன் இணைந்து, மில்லி மீட்டர் துல்லியம் கொண்ட XYZ திசையில் கட்டப்பட்டு உள்ளது. கூடவே இதர பாகங்களான சென்சார்கள் , விதை செலுத்திகள், துளைக்கும் கருவிகள் மற்றும் சில பாகங்களும் அடங்கும். இந்த கருவிகள் அனைத்தும் மின் இணைப்பினை நாடாமல் காந்தத் தன்மையுடன் ஒன்றையொன்று இணைத்துள்ளது.அதனால் செய்யபோகும் வேலைக்கேற்ற தேவையான கருவிகளை தானாகவே தேர்ந்தேடுத்து பயனபடுத்தக் கூடியது. சரியான அளவு மற்று காலநிலை போன்றவற்றில் பயிர்களை வளர்க்ககூடியது.
இந்த மாதிரியான நவீன நுட்பங்களை விவசாயத்தில் செலுத்தியது உண்மையில் பாராட்டிற்குறியதே! இதனால் விவசாயத் துறையில் ஒரு மேம்பட்ட வளர்ச்சியினைக் காணும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருவிகள் அதிக அளவிலாளான பயிர்களை வளர்க்கும் நுட்பங்களையோ அல்லது விவசாயப் பண்ணைகள் போன்ற அமைப்பில் பயிர்களை வளர்க்கவோ வழிவகுக்கும். மேலும் தேனீ, மண்புழு போன்ற வளர்ப்புகளையும் அழிந்து வரும் உயிரனங்களையும் வளர்க்கவோ வழி வகுக்கும்.
ஃபார்ம் போட்டின் இந்த முயற்சி விவசாயத்தினை பொருத்தவரையில் முதலாவது தயாரிப்பே, என்றாலும் இவை ஒரு டிராக்டர்கள் செய்யும் வேலையினை செய்து விடும் அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும் இந்த ரோபோக்கள் கூடிய விரைவில் கிக்சஸ்டாட்டருக்குள் நுழைந்தவுடன் அதன் முன்பதிவுகளை பெறலாம்.
தானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பம்ப் டையர் !!

மிதிவண்டிகளை பயன்படுத்துபவர்களிடம் உங்களது வாகனத்திற்கு எந்த தேவைக்காக அதிகம் செலவிடுகுறீர்கள் என்று கேட்டால் அவர்களை பொறுத்தவரையில் காற்று நிரப்புவதைதான் கூறுவார்கள் . அந்த காற்றினையும் தானாகவே ஏற்றிக் கொள்ளும் நுட்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே பம்ப் டையர்நிருவனத்தினர் தொடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே! தற்போது அதே யுக்தியை பைக்குகளிலும் அறிமுகபடுத்த உள்ளனர் . இதனால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்ளும் அவசியமில்லை.
எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்?
டயர்களின் வால்வுகளில் காற்றினை நிரப்ப வெளிப்புறம் உள்ள வால்வுகளில் காற்றானது நிரப்பப்படும் போதுமான அளவு காற்று நிரம்பியவுடன் காற்று நிரப்படுவதை நிறுத்திக் கொள்ளும். இதனால் வாகனங்களில் காற்றை நிரப்ப உங்கள் கைகளை அழுக்காக்கி கொள்ளும் அவசியம் இருக்காது. மேலும் தேவையான அளவிற்கு காற்றினை உயர்த்தியும் குறைத்தும் கொள்ளலாம்.அப்படியானால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்வது என்பது அவசியமில்லை. பெஞ்சமின் பிராங்கிளின் இதனை அடுத்த வருடத்தில் கிக்ஸ்டாட்டரில் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு சாதனத்தின் விலையினை $30 முதல் $55 வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளனர். தானாகவே காற்றினை நிரப்பிக் கொள்ளும் யுக்தி என்பது இதற்கு முன்னரே மிதிவண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே நுட்பத்தை பைக்குகளில் 700cமற்றும் 26-அங்குலம் கொண்ட டயர்களுக்கு பொருந்தும்படி அமைக்க உள்ளனர்.
பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப்!!

பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் கைபேசிகளில் குறுஞ்செய்தி சேவையின் ஜாம்பவனான வாட்ஸ் அப், 48 மணி நேரம் பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பிரேசிலில் நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது.
எனவே அதன் சேவையை 48 மணிநேரம் நிறுத்தி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து முடங்கிய சேவை, மீண்டும் தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதன் போட்டி நிறுவனம் ஒன்று, 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை கையாள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்ஸும்
ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாதத்தை வலுவாக முன்வைக்கின்றன.
இதைத்தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார். சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல், ஒரு வளமாகக் கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "புலம்பெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாகப் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன்தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால்தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (http://www.banksy.co.uk/index1.asp) காணலாம்.
2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள்
சாதரணமாக கேமராக்களில் எடுக்கும் அனைத்து புகைப்படங்களும் தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும் எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமையும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன் பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ அல்லது நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு வருவதாகும். மேலும் இவற்றிற்கென வரையறுக்கப்பட்ட எல்லைகள் என எதுவும் இல்லை என்பதால் ஒரு புகைப்படமே பல அர்த்தங்களை உணர்த்தி விடும்.அத்தகைய அனைத்து அளவீடுகளும் சரியாக அமைந்த சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்காக கீழே
click in the image to view full size
வந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள்
இதுவரை தொலைக்காட்சி கணிணி விளையாட்டு சாதனங்கள் போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை மட்டும் தான் தொலையியக்கியுடன் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .
நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது.தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்பானங்களை வழங்கும் ஒரு இயந்திர மனிதனாக செயல்படுகிறது. இதனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தை தேடி நாம் போக வேண்டிய அவசியமில்லை.இந்த சிறிய குளிர்சாதனப் பெட்டியே நம்மைத் தேடி வந்து நமக்குத் தேவையானவற்றை அளிக்க வல்லது .
நகரும் தலையும் அதிநவீன பிளாஸ் லைட்டுகளையும் கொண்ட இந்த சிறு குளிர் சாதனப் பெட்டியில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தின்பண்டங்களையும் குளிர்பதனங்களையும் நிரப்பிக் கொள்ளலாம்.இதனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது வயதானவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும்.இதில் சிறிய அளவுடன் கூடிய பொருள்கள் மட்டுமே வைக்க முடியும் என்பது ஒரு குறையாக இருந்தாலும் சாதாரண குளிர்சாதனப் பெட்டியி இல்லாத ஒரு உதவியாளனை இதில் காணலாம் என்ற நம்பிக்கையில் இதனை வாங்கலாம். இது உங்கள் வீட்டை அழகுபடுத்தும் ஒன்றாக அமையும்.
குளிர்சாதனப் பெட்டியின் ஒவ்வொறு பகுதியிலும் ஆறு கேன்களையும் தொலையியக்கியுடன் கூடிய வசதிகளையும் செய்து தருகிறது. மேலும் 2 மணி நேர மின்கலன் சேமிப்பில் ஒரு முழு அறையையும் தொடர்ந்து வலம் வரும் திறன் கொண்டது.இதனை ஹேர் ஏசியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.இந்த R2-D2 வின் நகரும் குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்கு ஜப்பானுக்கு சென்றால் மட்டுமே முடியும் . இதன் முன் உத்தரவுகளை¥ 998000 செலுத்தி அதாவது $8274 டாலர்களை செலுத்தி பெறலாம் .
சார்ஜராக மாறிய பணப்பை
நாம் அவசரமாக எங்காவது செல்லும்போது போனில் சார்ஜர் இல்லாவிடில் உடனே ஒரு சார்ஜரை எடுத்து பையில்- போட்டுக் கொண்டு போகும் இடத்தில் சார்ஜ் நிரப்பி கொள்ளலாம் என நினைத்து கொள்வோம்.அனால் திருதிஷ்டவசமாக நமக்கு தென்பட்ட இடங்களில் எல்லாம் சார்ஜ் ஏற்றும் வசதிகள் இருப்பதில்லை.இதற்காகவே நோமட் நிறுவனத்தினர் பணப்பையை சார்ஜராக உபயோகிக்கும் நுட்பத்தினை அறிமுகபடுத்தியுள்ளனர்.
இதில் பணப்பையிலேயே சார்ஜ் செய்யும் திறனும் இருக்கிறது . இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பணப்பைகள் உங்களுக்கு உங்களுக்கு ஒரு இலாபகரமான சார்ஜராகவும் மாறுகின்றன .இந்த பணப்பையை உங்கள் போனிற்கு தேவையான சார்ஜினை கொண்ட ஒரு தொகுப்பினைக் கொண்டுள்ளது . இது சாதாரண சார்ஜர்களைப் போல் இடத்தை அடைத்து கொண்டிருக்காமல் உங்கள் பணப்பையே சார்ஜராக மாற்றுவதால் கையாளச் சிறந்ததே.!
95mm உயரமும் 125mm அகலமும் 25mm தடிமனும் மட்டுமே கொண்டிருப்பதால் மிகவும் எளிதான எடையைஉடைய ஒரு மெல்லிய சிறிதான பணப்பையில் சார்ஜினை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது . இதுவே ஒரு முழு ஐபோன் 6s ஐ முழுவதுமாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாக உள்ளது.
பணப்பையில் உள்ள சார்ஜ் தீர்ந்து விட்டால் அதனை எந்த usb சார்ஜரினைக் கொண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதிலுள்ள பிளாஷிங் இண்டிகேட்டர் லைட்டுகள் பணப்பையில் எவ்வளவு சார்ஜுகள் இருக்கிறது என்பதை தெரியபடுத்திக் கொண்டே இருக்கும் . இந்த பணப்பை ஒரு பணத்தை சேமிக்கும் பையாக மட்டுமே செயல்படாமல் சார்ஜினை சேமிக்கும் நிலையமாகவும் செயல்படுவது சிறப்பே ! ஒரே நேரத்தில் அனைத்து சாதனங்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வசதிகள் கொண்ட நவீன சாதனங்கள் இருப்பினும் இந்த பணப்பை போன்ற சார்ஜர் பயனர்களின் அவசர காலங்களில் கண்டிப்பாக கை கொடுக்கக் கூடியதாக அமையும் . ஐபோன்களுக்கு சார்ஜ் ஏற்றும் இந்த பணப்பையின் முன் உத்தரவுகளை $80க்கு பெறலாம். இது நவம்பர் 15ல் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
No comments:
Post a Comment