Sunday 20 December 2015

சிறுவர்களுக்கான ஸ்மார்ட் போன்

ஸ்வைப் (Swipe) நிறுவனம், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மார்ட் போன் ஒன்றை, 'ஸ்வைப் ஜூனியர்' (Swipe Junior) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். சிறுவர்களின் சிந்திக்கும் திறனைச் செயல்படுத்திப் பார்க்கும் வகையிலான செயல்பாட்டினைத் தருவதோடு, வேடிக்கை விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொள்வதனையும் இந்த ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், சிறுவர்களின் செயல்பாட்டிற்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் வகையில், சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகளை செட் செய்து, அவர்களின் பயன்பாட்டினைக் கண்காணிக்கலாம். போனில் ஏற்படுத்தப்படும் தொடர்பு எண்கள், செட்டிங்ஸ் ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். சிறுவர்கள், இந்த ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இணையத் தேடல், கேம்ஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்களில் செலவழிக்கும் நேரத்தையும் வரையறை செய்திடலாம். ஜி.பி.எஸ். மூலம், போன் எந்த இடத்தில் வைத்துப் பயன்படுத்தப்படுகிறது என்பதனையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளலாம். 

சிறுவர்களுக்கான பல அப்ளிகேஷன்கள் இதில் பதியப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட் போன். இதன் யூசர் இன்டர்பேஸ் அமைப்பினைச் சிறுவர்கள் விரும்பும்
வால் பேப்பர் மற்றும் ரிங் டோன்களுடன் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கானது என்பதால், கீழே போடுவதால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உடைதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதன் மற்ற தொழில் நுட்ப சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திரை 4.5 அங்குல அளவில், ஐ.பி.எஸ். டிஸ்பிளே தருகிறது. ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இதில் 3ஜி இயக்கத்தில் செயல்படும் சிம் ஒன்றினை மட்டும் பயன்படுத்தலாம். பின்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.2 எம்.பி. திறனுடனுன் அமைக்கப்பட்டுள்ளது. வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 1,900 mAh திறனுடன் உள்ளது. இதன் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 120 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999. ஊதா மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது

No comments:

Post a Comment