Sunday, 20 December 2015

குரோம் இயங்குதளத்திற்கான VLC Media Player அறிமுகம்


அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு சிறந்த மென்பொருளாக VLC Media Player காணப்படுகின்றது.
இந்த மென்பொருள் ஆனது Windows, OS X, Linux, BSD, Solaris, OS/2, Haiku/BeOS, மற்றும் ReactOS ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
 
எனினும் முதன்முறையாக கூகுளின் Chrome OS இயங்குதளத்தில் செயல்படக்கூடிய பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
வீடியோ கோப்புக்கள் தவிர்ந்த ஆடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு பயனுள்ளதாக காணப்படும் இந்த மென்பொருள் C மற்றும் C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment