இன்றைய காலகட்டத்தில்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மக்களின் வாழ்க்கைமுறையும், பலவழக்கங்கள்
என அனைத்தும் முன்னேறி இருக்கிறது என்றே கூறலாம். அதே சமயம் மக்களிடம்
தேவைக்கேற்ப சூழ்நிலைகளில் மாற்றம் அடைந்துள்ளனர் என்பது அனைவரும்
அறிந்ததே.

மக்களின் அனைத்து தேவைகளிலும் முக்கிய பங்கு வகிப்பது பணம். தற்போது, பெருகி வரும் பணப்பரிமாற்றம் அனைத்தும் ஆன்லைன் மூலமே, அதிலும் பலவகையாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் மொபைல்களில் வந்துள்ள பேடிஎம், போன் பே இன்னும் இதுபோன்று பயன்படுத்தப்படும் அனைத்தும் பணபரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தாலும் ஆபத்துகளும் இருப்பது ஒரு வகையான ஏமாற்றமாக இருக்கிறது.

டெல்லி கல்கஜியில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் யூசுஃப் கரிம் (28) . இவர் தனது ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்வதற்காக செல்போன் சர்விஸ் சென்டரில் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்மார்ட்போனில் உள்ள பே.டி.எம் கணக்கை லாக் செய்யாமலும், ஈமெயில் கணக்கை லாக் அவுட் செய்யாமலும் கொடுத்துள்ளார்.

சர்விஸ் செய்த பின்னர் போனை வாங்கிப்பார்த்த போது, அதில் அவர் பே.டி.எம் கணக்கில் இருந்து ரூ.91000 பணம், நான்கு தவணைகளாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை அடுத்து செல்போன் சர்விஸ் சென்டர் உரிமையாளரிடம் கேட்டபோது வேறு யாரோ பணம் எடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளான். அவன் மீது சந்தேகமடைந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் போனின் உரிமையாளர் பே.டி.எம் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கணக்கை முடக்க பலமுறை புகாரளித்தும், ஆனால் கணக்கை இன்னும் முடக்க வில்லை என தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவு வளச்சியடைந்தாலும் சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது அவரவர் கடமையாகும்.

No comments:
Post a Comment