Saturday 3 November 2018

கூகுள் ஊழியர்களுக்கு அதிரடியாக எச்சரிக்கை விடுத்த சுந்தர்பிச்சை.!

சமீபத்தில் நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை மீ டூ என்ற ஹாஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.இத்தகைய மீடூ விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்திலும் மீடூ பிரச்சனை தலைதூக்கி 48 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மீடூ விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில் 'கூகுள் நிறுவனம் மீடூ குற்றச்சாட்டுக்கள் குறித்து மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றில்  உண்மை இருந்தால் அவர்கள் நிச்சயமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டில் பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள்.
பாலியல் புகார்களை  தெரிவிக்கும் ஊழியர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், . உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு மிகத் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment