Saturday 3 November 2018

இந்தியாவிற்கு வந்த சோதனை!

உலக நாடுகளில் தற்போது இணையம் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் இந்தியா இணையதளத்தை முடக்கம் செய்வதில் புதிய சாதனை படைத்தது என்றே சொல்லலாம். இந்தியாவில் இணைய தளங்களை வைத்தே போராட்டம் அதிகளவில் நடப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் கடந்த சில வருடங்களை உள்நாட்டில் நடந்து வந்த போராட்டங்களினால் இணையதள சேவையை மத்திய அரசு அதிகளவில் முடக்கி வந்துள்ளது.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அடிக்கடி இணைய சேவையை மத்திய அரசு முடங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் அதிக போராட்டம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி இணையம் முடக்கம் செய்யப்படுகிறது.

2018ம் ஆண்டில் காஷ்மீரில் 112 முறையும், ராஜஸ்தானில் 56 முறையும், உத்திர பிரதேசம், பீகார், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசியாக தெலுங்கானாவில் 5 முறை இணையம் முடக்கம் செய்யப்பட்டது.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகள் வரிசையாக உள்ளன.
இந்தியாவில் மாநிலங்களில் நடக்கும் மதக்கலவரங்கள், உள்ளூர் பிரச்சனைகள், அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கையில் எடுப்பதால் இணையம் முடக்கம் நிகழ்கிறது. இந்நிலையில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, அறிவியல் போன்றவைகளில் இணையதளம் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது இணையதளவாசிகளின் கேள்வியாக இருப்பது, இவ்வாறு  இணையம் முடக்கம் ஏற்பட்டால் இணையம் தொடர்பான பிரச்னைகளை எப்படி கையாள்வதும், இதற்கு அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment