Sunday, 4 November 2018

Saturday, 3 November 2018

செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தால்.!

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

கூகுள் ஊழியர்களுக்கு அதிரடியாக எச்சரிக்கை விடுத்த சுந்தர்பிச்சை.!

சமீபத்தில் நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை மீ டூ என்ற ஹாஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.இத்தகைய மீடூ விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்திலும் மீடூ பிரச்சனை தலைதூக்கி 48 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மீடூ விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில் 'கூகுள் நிறுவனம் மீடூ குற்றச்சாட்டுக்கள் குறித்து மிகக்கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றில்  உண்மை இருந்தால் அவர்கள் நிச்சயமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டில் பாலியல் புகாருக்கு ஆளான 48 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள்.
பாலியல் புகார்களை  தெரிவிக்கும் ஊழியர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், . உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு மிகத் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு வந்த சோதனை!

உலக நாடுகளில் தற்போது இணையம் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் இந்தியா இணையதளத்தை முடக்கம் செய்வதில் புதிய சாதனை படைத்தது என்றே சொல்லலாம். இந்தியாவில் இணைய தளங்களை வைத்தே போராட்டம் அதிகளவில் நடப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் கடந்த சில வருடங்களை உள்நாட்டில் நடந்து வந்த போராட்டங்களினால் இணையதள சேவையை மத்திய அரசு அதிகளவில் முடக்கி வந்துள்ளது.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அடிக்கடி இணைய சேவையை மத்திய அரசு முடங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் அதிக போராட்டம், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி இணையம் முடக்கம் செய்யப்படுகிறது.

2018ம் ஆண்டில் காஷ்மீரில் 112 முறையும், ராஜஸ்தானில் 56 முறையும், உத்திர பிரதேசம், பீகார், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசியாக தெலுங்கானாவில் 5 முறை இணையம் முடக்கம் செய்யப்பட்டது.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், சிரியா, ஈராக், துருக்கி போன்ற நாடுகள் வரிசையாக உள்ளன.
இந்தியாவில் மாநிலங்களில் நடக்கும் மதக்கலவரங்கள், உள்ளூர் பிரச்சனைகள், அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கையில் எடுப்பதால் இணையம் முடக்கம் நிகழ்கிறது. இந்நிலையில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, அறிவியல் போன்றவைகளில் இணையதளம் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது இணையதளவாசிகளின் கேள்வியாக இருப்பது, இவ்வாறு  இணையம் முடக்கம் ஏற்பட்டால் இணையம் தொடர்பான பிரச்னைகளை எப்படி கையாள்வதும், இதற்கு அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பேடிஎம்-ஆல் வந்த புதிய ஆபத்து! மக்களே உஷார்!!

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மக்களின் வாழ்க்கைமுறையும், பலவழக்கங்கள் என அனைத்தும் முன்னேறி இருக்கிறது என்றே கூறலாம். அதே சமயம் மக்களிடம் தேவைக்கேற்ப சூழ்நிலைகளில் மாற்றம் அடைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

மக்களின் அனைத்து தேவைகளிலும் முக்கிய பங்கு வகிப்பது பணம். தற்போது, பெருகி வரும் பணப்பரிமாற்றம் அனைத்தும் ஆன்லைன் மூலமே, அதிலும் பலவகையாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் மொபைல்களில் வந்துள்ள பேடிஎம், போன் பே இன்னும் இதுபோன்று பயன்படுத்தப்படும் அனைத்தும் பணபரிமாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தாலும் ஆபத்துகளும் இருப்பது ஒரு வகையான ஏமாற்றமாக இருக்கிறது.

டெல்லி கல்கஜியில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் யூசுஃப் கரிம் (28) . இவர் தனது ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்வதற்காக செல்போன் சர்விஸ் சென்டரில் கொடுத்துள்ளார். ஆனால் ஸ்மார்ட்போனில் உள்ள பே.டி.எம் கணக்கை லாக் செய்யாமலும், ஈமெயில் கணக்கை லாக் அவுட் செய்யாமலும் கொடுத்துள்ளார்.

சர்விஸ் செய்த பின்னர் போனை வாங்கிப்பார்த்த போது, அதில் அவர் பே.டி.எம் கணக்கில் இருந்து ரூ.91000 பணம், நான்கு தவணைகளாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை அடுத்து செல்போன் சர்விஸ் சென்டர் உரிமையாளரிடம் கேட்டபோது வேறு யாரோ பணம் எடுத்திருக்கிறார்கள்  என்று கூறியுள்ளான். அவன் மீது சந்தேகமடைந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் போனின் உரிமையாளர் பே.டி.எம் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கணக்கை முடக்க பலமுறை புகாரளித்தும், ஆனால் கணக்கை இன்னும் முடக்க வில்லை என தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவு வளச்சியடைந்தாலும் சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது அவரவர் கடமையாகும்.

வாட்ஸ்அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி!

சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுவையான வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாமல் இன்றைய வாழ்க்கை யாருக்கும் நகராது என்பது அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் ஒரே நிறுவனமாக இருந்தாலும், அதனிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தும் நிலையை பயனாளர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.

இதற்கிடையில் பேஸ்புக்கில் இருக்கும் வசதிகள் வாட்ஸ்அப்பில் இல்லை என்று பயனாளர்கள் தெரிவித்ததையடுத்து குரூப் வீடியோ காலிங், ஒருமுறை அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, வாட்ஸ்அப் குரூப்பிலும், ஒருவர் மற்றொருவருடன் மறைமுகமாக பேசும் வசதியை கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் செயலி 2.18.335 வெர்ஷனில் கொண்டு வந்துள்ளது. இதனை ஐஓஎஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய செயலியியை வாட்ஸ்அப் பயனாளர்கள் இரவில் பயன்படுத்தும் போது, டார்க் மோட் (Dark Mode) என்ற வசதியை கொண்டு கண் கூசாமல் பயன்படுத்தலாம். இந்நிலையில் இதில் ஸ்டிக்கர்கள், கூடுதல் எமோஜி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே ரிப்ளே செய்யும் வசதி போன்றவைகளை விரைவில் கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tuesday, 30 October 2018

XIAOMI MI 6a Mtk Mi Account and Frp Tested File

XIAOMI MI 6a Mtk Mi Account Remove File

XIAOMI MI 6a Frp Remove File

MTK Micloud & FRP Bypass File

Without Password