Monday 4 May 2015

செல்போன் ரிப்பேரா ஆகிடுச்சா? நீங்களே சரி செய்யலாம்..!

உலகில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தகுதிக்கு தகுந்த செல்போன்களை பயன்படுத்திக்கொண்டுள்ளனர். செல்போன் இல்லாமல் யாருமே இருப்பதில்லை. 
அவசரத் தேவைக்காக தொலைதூரத்தில் இருப்பவர்களை தொடர்புகொண்டு பேச கண்டுபிடிக்கப்பட்டதுதான் தொலைபேசி. 
அதன் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து, தற்பொழுது ஸ்மார்ட்போனாக மாற்றம் பெற்றுள்ளது. 
கையடக்கத் தொலைபேசிகளில் Samusng, LG, HTC, Blackberry, iPhone போன்ற ஸ்மார்ட் போன்களும் உண்டும். Sony, Nokia, போன்ற மற்ற நிறுவனங்களின் போன்களும் உண்டும். அதேபோல குறைந்த விலையில் அதிக பயன்பாடுகள்கொண்ட சைனா ரக  Gfive, tinmo, Lephone வகை போன்களும் உண்டு. 
அவரவர்களின் வசதிக்கேற்ப செல்போன்களை வாங்கிப் பயன்படுத்தும் பயனர்கள், தொடர்ச்சியாக தங்களது செல்போன்களை சரியாக பராமரிக்கிறார்களா என்றால் அதுதான்..
தவறுதலாக கீழே போட்டுவிடுவது, தண்ணீரில் நனைத்துவிடுவது, குழைந்தைகளிடம் விளையாட கொடுப்பது, இருக்கையில் செல்போனை வைத்துவிட்டு தவறுதலாக அதன் மீதே உட்கார்ந்துவிடுவது, படுக்கையில் வைத்த செல்போனின் மீது தவறுதலாக படுத்துருள்வது என ஒவ்வொவரும் தங்களது இயல்பிற்கு ஏற்றவாறு சில தவறுகளை செய்கின்றனர். இதனால் செல்போன் பழுதாகி போய்விடும்.
உடனே அதை எடுத்துக்கொண்டு Cellphone Service சென்டருக்குப் போய் அதற்கு 500, 1000, 2000 என செலவு செய்து சரிசெய்வார்கள். 
இதுபோன்ற நிலைமையில் மனிதர்களுக்கு விபத்தில் முதலுதவி செய்வதைப் போல, உங்களுடைய செல்போனுக்கு முதலுதவி செய்து, அவற்றை நீங்களே சரி செய்ய முடியும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செல்போன் ரிப்பேர் ஆகாமல் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment