Monday 4 May 2015

Windows XP இன்னும் பயன்படுத்தறீங்களா? ஆபத்து

கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பழைய விண்டோஸ் ஓ.எஸ். பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
windows-xp-gone
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் ஓ.எஸ்.களில் மிகப்பெரிய அளவில் அதிகமான பயனர்களைப் பெற்றுத் தந்த இயங்குதளம் இது.
2001 ம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1 விட நான்கு பதிப்புகள் முந்தையது ஆகும்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயங்குதளங்களானது , ஆரம்ப கால MS – DOS லிருந்து தற்பொழுது சமீபத்தில் வெளயிடப்பட்ட விண்டோஸ் 8.1 வரை, படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, மேம்படுத்தபட்டு வெளிவந்தவை.
ஒவ்வொரு பதிப்பிலும் புதிய நுட்பங்கள், எளிய பயனர் இடைமுகம் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இதனால் பயனர்கள் பழைய பதிப்பை விட்டுவிட்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மாறி வந்தனர்.
விண்டோஸ் OS பதிப்புகள்
ஆரம்ப காலத்திலிருந்து வெளிவந்துள்ள விண்டோஸ் OS பதிப்புகள் (ஆண்டு வாரியாக)
  1. MS-DOS – 1981
  2. Windows 1.0 – 1985
  3. Windows 2.0 – 1988
  4. Windows 2.03, Windows 3.0 – 1990
  5. Windows 3.1 – 1992
  6. Windows NT – 1993
  7. Windows 95 – 1995
  8. Windows 98 – 1998
  9. Windows 2000
  10. Windows XP – 2002
  11. Windows Server 2003
  12. Windows 7 – 2007
  13. Windows 8 – 2008
  14. Windows 8.1
விண்டோஸ் XP சேவை நிறுத்தம்:
இந்தியாவில் மட்டும் உள்ள Windows XP கம்ப்யூட்டர்களை இயக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 1,190 கோடி ரூபாய் செலவானதாகவும், தற்பொழுது வெகு சிலரே விண்டோஸ் எக்ஸ்பி யைப் பயன்டுத்துவதால் அதற்கு 300$ டாலர் செலவாகும் எனவும் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவுகளைக் குறைக்கவும், புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பயன்பாடுகளை (Windows 8.1) அதிகரிக்கவும் இச்சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
இதனால் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, அடுத்த அடுத்த புதிய பதிப்புகளான Windows 7, Windows 8 , Windows 8.1 பதிப்புகளுக்கு மாறிவிட்டனர்.windows-xp-retired
விண்டோஸ் புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்.
ஒரு சிலர் மட்டும் இன்னும் மாறாமல் விண்டோஸ் எக்ஸ்பியிலேயே கணினியை இயக்கிக்கொண்டுள்ளனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி – யை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற பயனர்கள் 84 சதவிகதம் பேர் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, புதிய பதிப்புக்கு மாறிவிட்டனர். ஏனைய 16 சதவிகிதம் பேர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Windows XP இயங்குதளங்களுக்கு புதிய அப்டேட் கிடைக்காத நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்டோஸ் ஓ.எஸ். -ன் அடுத்தடுத்த புதிய பதிப்புகளுக்கு மாறுவது கட்டாயமாகும். இதனால் இணையம் வழியாக ஏற்படும் வைரஸ் போன்ற பிரச்னைகளிலிருந்து கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, பதிய பதிப்புகளில் உள்ள மேன்படுத்தப்பட்ட வசதிகளை பெற்று பயனடைய முடியும்.

No comments:

Post a Comment