Monday 4 May 2015

எப்.எம். ரேடியோவில் ஆர்.டி.எஸ் தொழில்நுட்பம்

சாதாரண மொபைல் போன் முதல் தற்பொழுது பிரபலமாகியுள்ள ஸ்மார்ட்போன்கள் வரை எப்.எம். ரேடியோ வசதி இல்லாத மொபைல்களே இல்லை.
மொபைல்கள் வாங்கும்போது, அதனுடைய மேனுவல் கைடில் அதில் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பார்கள். அதில் FM Radio – RDS என்ற ஒரு குறிப்பையும் பார்க்கலாம்.
எப்.எம். ரேடியோ என்றால் தெரியும். அதென்ன RDS?
RDS என்பது Radio Data Service என்பதன் சுருக்கம். இந்த தகவல்தொழில்நுட்ப நெறிமுறையானது, எப்.எம்.ரேடியோ ஒலிப்பரப்படும்பொழுது, அந்த ரேடியோ நிலையம் குறித்த தகவல்கள் மற்றும் அப்பொழுது ஒலிப்பரப்பபடும் நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகளை டேட்டாவாக அனுப்ப பயன்படும் நுட்பமாகும்.
ஒரு எப்.எம். ரேடியோவை கேட்கும்பொழுது, அந்த நிலைய அறிவிப்பாளர், அந்நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகள், ஒலிப்பரப்படும் ரேடியோவின் பெயரை குறிப்பிடும்வரை நமக்கு தெரியாது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்த ஒரு FM Radio நிகழ்ச்சியாக இருந்தாலும், நீங்கள் வைத்திருக்கும் செல்போனில், அதுகுறித்த தகவல்கள் Data வாக உங்களுக்கு காட்டப்படும்.
செல்போன் மட்டுமல்ல.. கார் ஸ்டீரியோக்களிலும் இதுபோன்ற டேட்டாக்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். செல்போனில் RDS வசதியை பெற செட்டிங்சில் RDS Enable செய்திருக்க வேண்டும். அவ்வாறு எனேபில் செய்திருந்தால் எப்.எம்.ரேடியோவில் ஒலிப்பரப்படும் நிகழ்ச்சி, நேரம், நிலையத்தின் பெயர் போன்ற டேட்டாக்களை செல்போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.
இந்த வசதியுள்ள செல்போன் மற்றும் கார் ஸ்டீரியோக்களில் எப்.எம். ரேடியோவின் அலைவரிசை எல்லையை கடக்கும்பொழுது, அதில் ஒலிப்பரப்படும் அதே நிகழ்ச்சி வேறொரு எப்.எம்.மில் ஒலிப்பரபப்பாகிக் கொண்டிருந்தால் தானாகவே அந்நிகழ்ச்சிக்கு மாறிவிடும். அவ்வாறு மாறுவதற்கும் RDS தொழில்நுட்பமே காரணம்.
ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும்பொழுது, இடையே முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியானால், எந்த ஒரு அலைவரிசையில் ரேடியோ ஒலிப்பரப்பாகிக்கொண்டிருந்தாலும், அனைத்து அலைவரிசையிலும் அந்த முக்கியமான அறிவிப்பு ஒலிபரப்பாகும். இதற்கும் இந்த RDS தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது

No comments:

Post a Comment