Saturday 3 December 2016

Do U Know:

Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.

Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்

No comments:

Post a Comment