Saturday 3 December 2016

Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர் போர்ட், சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.

Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.

Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.

Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.

Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது

No comments:

Post a Comment